ஆன்லைனில் இந்தத் தப்பு செஞ்சா உங்க வாலட் சுத்தமா காலி ஆகிரும்! உஷாரா இருங்க!

First Published | Nov 25, 2024, 9:14 AM IST

ஆன்லைன் ஷாப்பிங் பல விஷயங்களை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஆனால் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்கள் சிறு தவறு செய்தாலும் அவர்களின் வங்கி கணக்கையே காலி செய்துவிடுகிறார்கள்.
 

Online shopping tips

ஆன்லைன் ஷாப்பிங் பல விஷயங்களை மிகவும் எளிதாக்கியுள்ளது. ஆனால் மறுபுறம் எதிர்மறையான அம்சங்களும் உள்ளன. சைபர் கிரைம் குற்றவாளிகள் ஆன்லைன் ஷாப்பிங் வாடிக்கையாளர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட முயல்கிறார்கள். சிறு தவறு செய்தாலும் வங்கி கணக்கையே காலி செய்துவிடுகிறார்கள்.

Online shopping guide

இன்றைக்கு பலர் தங்களது அத்தியாவசிய பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் வாங்குகின்றனர். இருப்பினும், இது ஹேக்கர்களுக்கு வசதியாக இருக்கிறது. முக்கியமாக, தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், பாஸ்வேர்டு போன்றவற்றை திருடுகிறார்கள். இந்தத் தகவல்கள் ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால், அவர்கள் அதை தவறாகப் பயன்படுத்துவார்கள்.

Tap to resize

Online shopping hackers

இதிலிருந்து தப்பிக்க, ஆன்லைன் ஷாப்பிங்கை ஹேக்கர்கள், சைபர் கிரிமினல்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். கவனமுடன் சில தவறுகளைச் செய்யாமல் இருந்தால், பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம்.

Online shopping safety

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, ​​நீங்கள் ஷாப்பிங் செய்யும் தளம் அல்லது ஆப்ஸ் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் பெரும்பாலும் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்ற போலியான தளங்களை உருவாக்குகிறார்கள். எனவே நம்பகமான தளத்தில் மட்டுமே ஷாப்பிங் செய்யுங்கள். தளத்தின் நம்பகத்தன்மையை அறிய, தளத்தின் முகவரி https எனத் தொடங்குவதை உறுதிசெய்யவும்.

Safe Online shopping

பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு தகவல்களை இணையதளத்தில் சேமித்து வைக்கிறார்கள். இது ஷாப்பிங் செய்யும்போது நேரத்தை மிச்சப்படுத்தும் அதே வேளையில், ஹேக்கர் தளத்தை ஹேக் செய்யும்போது, ​​உங்கள் வங்கி விவரங்களும் ஆபத்தில் சிக்கும். எனவே தெரியாத தளத்தில் ஷாப்பிங் செய்யும்போது உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை பதிவுசெய்து வைக்க வேண்டாம்.

Latest Videos

click me!