வாட்ஸ்அப் டான்ஸ்கிரிப்ட்! வாட்ஸ் நோட்டை டெக்ஸ்ட்டாக மாற்றும் புதிய அப்டேட்!

First Published | Nov 23, 2024, 11:19 AM IST

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ஷன் என்ற புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் சில மொழிகளில் மட்டும் கிடைக்கும் இந்த அம்சம் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும்.

WhatsApp Voice Note Transcription Feature

மெட்டாவின் பிரபலமான செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் வாய்ஸ் நோட்டை டெக்ஸ்ட்டாக மாற்ற முடியும்.

WhatsApp Transcription

இந்த புதிய அம்சம் பயனர்களின் உரையாடலுக்கு இடையூறு ஏற்படுத்தாது என்றும் அவர்கள் சாட் செய்யும்போது வேறு எந்த வேலையையும் செய்யலாம் என்றும் வாட்ஸ்அப் கூறுகிறது. வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் இன்னும் சில வாரங்களில் உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும். முதல் கட்டமாக, சில மொழிகளில் மட்டும் அறிமுகமாகிறது.

Tap to resize

WhatsApp Voice Note

இந்த அப்டேட் குறித்து வாட்ஸ்அப் தனது பிளாகில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. சில நேரங்களில் வாய்ஸ் நோட்டைக் கேட்க முடியாத சூழ்நிலையில் இருந்தால், டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளது. இரைச்சல் நிறைந்த சூழலில் இருக்கும்போது வாய்ஸ் மேசேஜை கேட்பதற்குப் பதிலாக இந்த வசதியைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

WhatsApp Transcription Feature

டிரான்ஸ்கிரிப்டுகளை வாட்ஸ்அப் நிறுவனம் உள்பட வேறு யாரும் படிக்க முடியாது. எனவே தனிப்பட்ட செய்திகள் பாதுகாப்பாக இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்த, வாட்ஸ்அப் Settings இல் Chats பகுதிக்குச் சென்று, வாய்ஸ் மெசேஜ் டிரான்ஸ்கிரிப்ட் ஆப்ஷனை ON செய்ய வேண்டும். பின், விருப்பமான மொழியையும் தேர்ந்தெடுக்கலாம்.

WhatsApp Update

இதைப் பயன்படுத்த, வாய்ஸ் மெசேஜை நீண்ட நேரம் அழுத்தும்போது தோன்றும் மெனுவிலிருந்து டிரான்ஸ்கிரிப் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் வாய்ஸ் மெசேஜை டிரான்ஸ்கிரிப்ட் செய்யலாம்.

இதற்கு முன், வாட்ஸ்அப் மெசேஜ் டிராஃப்ட் (Message Draft) அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இது ஒரு பயனர் அனுப்ப மறந்த செய்தியை சேமித்து வைக்கும் வசதியை வழங்குகிறது.

Latest Videos

click me!