வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை 4 விதமாக யூஸ் பண்ணலாம்? இதையும் ட்ரை பண்ணி பாருங்க!

First Published | Nov 19, 2024, 7:47 AM IST

வாட்ஸ்அப் (WhatsApp) மல்டி டிவைஸ் சப்போர்ட் (Multi Device Support) வசதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது எப்படி செயல்படுகிறது என்று பார்க்கலாம்.

Access WhatsApp on 4 devices

வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் புதிய வசதிகள் அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் 2024ஆம் ஆண்டில் கிடைத்துள்ள தனித்துவமான அம்சங்களில் ஒன்று மல்டி டிவைஸ் சப்போர்ட் (Multi Device Support). இந்த வசதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

WhatsApp Multi Device Support

இதற்கு முன் வெவ்வெறு சாதனங்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்த பயனர்களுக்கு தனித்தனி மொபைல் எண்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது மொபைல், லேப்டாப் உட்பட பல சாதனங்களில் ஒரே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப் கணக்கைப் பயன்படுத்த முடியும்.

Latest Videos


WhatsApp Companion Mode

Companion Mode என அழைக்கப்படும் இந்த அம்சத்தை பயன்படுத்த, முதன்மை சாதனத்தில் வாட்ஸ்அப் கணக்கை ஆக்டிவாக வைத்திருக்க பயனர்கள் வேண்டும். இப்போது நான்கு சாதனங்களில் வாட்ஸ்அப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

WhatsApp Web

லேப்டாப் வழியாக வாட்ஸ்அப்பை பயன்படுத்த, உங்கள் முதன்மை மொபைலில் வாட்ஸ்அப்பைத் திறந்து, கணினித் திரையில் காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். வாட்ஸ்அப் டெஸ்க்டாப் அப்ளிகேஷன் மூலம் வாட்ஸ்அப்பை அணுகுவதற்கும் இதே இதே முறையைப் பின்பற்றலாம்.

WhatsApp on secondary phone

மற்றொரு மொபைலில் வாட்ஸ்அப்பை இணைக்க, அந்த மொபைலில் வாட்ஸ்அப் செயலியை இன்ஸ்டால் செய்துகொள்ளவும். பின், பிரைவசி பாலிசியை ஏற்று உள்ளே நுழைந்ததும், மேல்பக்கம் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைத் தொட்டு, மெனுவுக்குச் செல்லவும். இந்த மொபைலை துணை சாதனமாக இணைப்பதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். திரையில் தோன்றும் QR குறியீட்டை உங்கள் முதன்மை மொபைலில் இருந்து ஸ்கேன் செய்யுவும்.

WhatsApp Tips and Tricks

இதைச் செய்து முடித்தவுடன், உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்கள் அனைத்தும் sync ஆகிவிடும். இணைக்கப்பட்ட எல்லா சாதனங்களிலும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம். தடையில்லாமல் இந்த வசதியை பயன்படுத்த முதன்மை மொபைலில் எப்போதும் வாட்ஸ்அப் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

WhatsApp Multi Device Support Limitations

இந்த மில்டி டிவைஸ் (Multi Device) அம்சம் நெகிழ்வுத்தன்மையை வழங்கினாலும், அதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. முதன்மை சாதனம் தவிர, மற்ற இணைக்கப்பட்ட சாதனங்களில் லைவ் லொகேஷன் ஷேரிங், ஸ்டேட்டஸ் அப்டேட் போன்றவற்றை பயன்படுத்த முடியாது. முதன்மை சாதனம் 14 நாட்களுக்கும் மேலாக இன்டர்நெட் இணைப்பு இல்லாமல் இருந்தால், இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் லாக்அவுட் (logout) ஆகிவிடும்.

click me!