WhatsApp Tips: வாட்ஸ்அப்பில் சீக்ரெட் குறியீடு மூலம் சாட் லாக் செய்வது எப்படி?

First Published | Nov 16, 2024, 12:43 PM IST

வாட்ஸ்அப் உரையாடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சமீபத்தில்தான் Chat Lock அம்சம் சேர்க்கப்பட்டது. மிகவும் தனிப்பட்ட உரையாடல்களை லாக் செய்ய ஒரு ரகசியக் குறியீட்டை பயன்படுத்தலாம்.

WhatsApp Tips and Tricks

வாட்ஸ்அப் உரையாடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க சமீபத்தில்தான் Chat Lock அம்சம் சேர்க்கப்பட்டது. மிகவும் தனிப்பட்ட உரையாடல்களை லாக் செய்ய ஒரு ரகசியக் குறியீட்டை பயன்படுத்தலாம். ரகசியமாக வைத்த சாட்களை பயனர்கள் Locked Chats என்ற பகுதியில் இருந்து அணுகலாம்.

WhatsApp Locked Chats

Chat Lock அம்சத்தைப் பயன்படுத்தினால், லாக் செய்யப்பட்ட சாட்கள் அனைத்தும், Locked Chats பகுதியில் இருக்கும். இங்குதான் சீக்ரெட் கோட் அம்சம் கைகொடுக்கிறது. லாக் செய்த மெசேஜ்களை சீக்ரெட் கோடு எப்படிப் பாதுகாக்கும் என்று பார்க்கலாம்.

Tap to resize

WhatsApp Secret Code

வாட்ஸ்அப்பில் உள்ள சீக்ரெட் கோடு (Secret Code) அம்சம் Locked Chat பகுதிக்கு பயனர்கள் பிரத்யேகமான பாஸ்வேர்ட் அமைக்க அனுமதிக்கிறது. அது மட்டுமின்றி, லாக் செய்யப்பட்ட சாட்களுக்குப் பயனர்கள் வேறு பெயர் வைக்கவும் ஆப்ஷன் உள்ளது. இந்தப் பகுதியை செயலியின் மேலே இருந்து மறைத்து வைக்கவும் முடியும். எனவே, மற்றவர்கள் யாரும் லாக் செய்த சாட்களை கண்டுபிடிப்பது கடினம்.

WhatsApp Privacy

லாக் செய்யப்பட்ட உரையாடல்களுக்கு ரகசியக் குறியீடு (Secret Code) ஒதுக்கப்பட்டதும், அவற்றை அணுக பயனர்கள் அந்தக் குறியீட்டைத் தேட வேண்டும். யாரேனும் தவறான குறியீட்டை தட்டச்சு செய்தால், லாக் செய்த உரையாடல்களை அணுக முடியாது.

WhatsApp Security

வாட்ஸ்அப் சீக்ரெட் குறியீட்டை பயன்படுத்தும் முன்பு, மனதில் கொள்ளவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. லாக் செய்து வைத்த சாட்களை அணுகுவது கடினமாக இருக்கும். நீங்களே அவற்றைத் திறக்க விரும்பினால்கூட, ஒவ்வொரு முறையும் Secret Code டைப் செய்ய வேண்டியிருக்கும்.

WhatsApp Update

உங்கள் வாட்ஸப் ரகசியக் குறியீடு (Secret Code) யாருக்காவது தெரிந்தால், அவர்கள் லாக் செய்த சாட்களைப் பார்த்துவிடலாம். மேலும், சீக்ரெட் குறியீட்டை நீங்கள் மறந்துவிட்டால், அந்த சாட்களை மீட்டெடுக்க வழி கிடையாது.

Latest Videos

click me!