டிஜிட்டல் அரெஸ்ட் என்றால் என்ன? மோசடி வலையில் சிக்காமல் இருப்பது எப்படி?

First Published | Nov 16, 2024, 8:59 AM IST

டிஜிட்டல் அரெஸ்ட் என்ற போர்வையில் தலைதூக்கி இருக்கும் புதிய மோசடி பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இழக்கக் காரணமாகியுள்ளது. இந்த மோசடியில், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள்.

Digital Arrest Scam

டிஜிட்டல் அரெஸ்ட் என்ற போர்வையில் தலைதூக்கி இருக்கும் புதிய மோசடி பலர் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை இழக்கக் காரணமாகியுள்ளது. இந்த மோசடியில், மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்ற அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்கிறார்கள். இது குறித்து பிரதமர் மோடியும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடந்தால் உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைனில் புகார் தெரிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். மேலும், CERT-In குழு டிஜிட்டல் கைது மோசடி குறித்து விளக்கியுள்ளது.

What is Digital Arrest Scam?

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்பது ஒரு வகை ஆன்லைன் மோசடியாகும். இந்த முறையில் மோசடிக்காரர்கள் மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏமாற்றி பறிக்கிறார்கள். மோசடி செய்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பயமுறுத்துகிறார்கள். சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள். பின்னர் தண்டனையைத் தவிர்க்க பணத்தை அனுப்புமாறு கேட்டு, அழுத்தம் கொடுக்கிறார்கள்.

Latest Videos


How Digital Arrest Scam works?

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் குற்றவாளிகள் சிபிஐ முகவர்கள், வருமான வரி அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் போன்ற அரசு அதிகாரிகள் போலக் காட்டிக்கொள்கிறார்கள். முதலில் தொலைபேசி அழைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். பின்னர், அவர்களை வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் போன்ற தளங்கள் மூலம் வீடியோ காலுக்கு வர வைக்கிறார்கள்.

நிதி முறைகேடு, வரி ஏய்ப்பு போன்ற சட்ட மீறல்கள் குற்றச்சாட்டுகளைக் கூறி, டிஜிட்டல் கைது வாரண்ட் இருப்பதாக அச்சுறுத்துகின்றனர். சில சமயங்களில், பாதிக்கப்பட்டவர்களை நம்ப வைக்க, போலியாக காவல் நிலையம் போன்ற அமைப்பையும் உருவாக்குகிறார்கள்.

How to avoid Digital Arrest Scam?

குறிப்பிட்ட வங்கிக் கணக்குகள் அல்லது UPI ஐடிகளுக்குப் பெரிய தொகையை மாற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். பணம் செலுத்தியவுடன், மோசடி செய்பவர்கள் தொடர்பிலிருந்து மாயமாகிவிடுகிறார்கள். இதனால், பணத்தை இழப்பது மட்டுமின்றி, தனிப்பட்ட தகவல் திருட்டு அபாயமும் இருக்கிறது.

மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள மிக முக்கியமான வழி விழிப்புடன் இருப்பதுதான்.

Cybercrime

அரசு அதிகாரியாகக் காட்டிக்கொண்டு, நீங்கள் சிக்கலில் இருப்பதாகக் கூறும் போன் கால் வந்தால், அப்படியே நம்பிவிட வேண்டாம். உண்மையான சட்ட அமலாக்க முகமை அதிகாரிகள் ஒருபோதும் பணத்தையோ வங்கி விவரங்களையோ கேட்க மாட்டார்கள்.

பேசுபவர் குறித்து உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவர்கள் குறிப்பிடும் தொடர்புடைய நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு சரிபார்க்கவும். அச்சுறுத்த முயன்றால், பீதி அடையாமல் அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். குறிப்பாக வங்கிக் கணக்கு விவரங்கள், ஆதார் எண் போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம்.

Cyber security

அரசு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்திற்கு WhatsApp அல்லது Skype போன்ற தளங்களைப் பயன்படுத்துவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். நீங்கள் ஏமாற்றப்படுவதாக நினைத்தால், உடனே உள்ளூர் காவல்துறை அல்லது சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் அளிக்கவும்.

cybercrime.gov.in

நீங்கள் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிக்கு ஆளானால், முதல் வேலையாக உங்கள் வங்கியில் புகார் அளித்து கணக்கை முடக்க வேண்டும். தேசிய சைபர் கிரைம் புகார்களுக்கான cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யவும்.

மோசடி தொடர்பான எல்லா ஆதாரத்தையும் உங்களிடம் எப்போதும் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக, அழைப்புகள் வந்த விவரங்கள், பரிவர்த்தனை விவரங்கள், மெசேஜ்கள் போன்றவற்றை அழியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த விஷயத்தில், தேவைப்பட்டால் வழக்கறிஞரின் உதவியையும் நாடலாம்.

click me!