மார்ஃபிங் செய்த படங்களைக் கண்டுபிடிக்க வாட்ஸ்அப்பில் புது வசதி!

First Published | Nov 7, 2024, 12:41 PM IST

போலிச் செய்திகள், வதந்திகளை அடையாளம் காணும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் (WhatsApp) கொண்டுவர உள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கிறது. தவறான தகவல் பரவுவதைத் தடுக்க உதவும் என்று வாட்ஸ்அப் கருதுகிறது.

WhatsApp Image Search

வாட்ஸ்அப்பில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் புதிய இமேஜ் சர்ச் (Image Search) அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் போட்டோக்களை சரிபார்க்கும் வழிமுறையை வழங்குகிறது.

படத்தைப் பார்க்கும்போது திரையில் தெரியும் மூன்று-புள்ளியை கிளிக் செய்தால், "Search on Web" என்ற ஆப்ஷன் இருக்கும். இது பயனர்கள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்யும் வசதியைக் கொடுக்கிறது.

WhatsApp Reverse Image Search

இந்த ரிவர்ஸ் இமேஜ் சர்ச் படத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற உதவுகிறது. இந்த வசதியைக் கொண்டு பகிரப்பட்ட படம் எடிட் செய்யப்பட்டதமாற்றப்பட்டதா அல்லது தவறாக சித்தரிக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க என அறிந்துகொள்ள முடியும்.

தவறாக எடிட் செய்யப்பட்ட படங்கள், மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள் மூலம் போலி தகவல்கள் பல்வேறு தளங்களில் வேகமாகப் பரவுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. இந்தச் சூழலில் படங்களின் தோற்றத்தை உறுதிப்படுத்துவதில் புதிய அம்சம் கைகொடுக்கும்.

Tap to resize

WhatsApp Image Verification

ஒரு படத்தின் நம்பகத்தன்மையை எளிமையாக உறுதிப்படுத்த முடியும். இது பயனர்களுக்கு உண்மையைச் சரிபார்க்கும் திறனை வழங்கி, தவறான தகவல் பரவுவதைத் தடுக்கவும் வழிவகுக்கிறது.

கூகுள் (Google) ரிவர்ஸ் இமேஜ் சர்ச் அம்சத்தின் மூலம் இந்த வசதி செயல்படுகிறது. இந்த அம்சம் குறிப்பிட்ட படம் ஆன்லைனில் முதலில் பகிரப்பட்டது எப்போது, எந்தத் தளத்தில் முதலில் வெளியானது, ஆன்லைனில் வேறு எந்தெந்த தளங்களில் இதே படம் இருக்கிறது என்ற தகவல்களை காண்பிக்கும்.

WhatsApp In-app features

இப்போதைக்கு, இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. விரைவில் அனைத்து பயனர்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

ஏற்கெனவே கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் (Google Reverse Image Search) வசதி பயன்பாட்டில் உள்ளது. படத்தை டவுன்லோட் செய்து கூகுளில் அதை அப்லோட் செய்தால் படத்தைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூகுள் தேடிக் கொடுக்கும்.

Latest Videos

click me!