உங்கள் ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா? இப்படி செக் பண்ணி பாருங்க!

First Published | Nov 20, 2024, 11:27 AM IST

ஆதார் தகவல்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. மோசடிக்காரர்களிடம் சிக்காமல் இருக்க ஆதார் கார்டு தகவல்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது அவசியம். ஆதார் ஆணையம் வழங்கும் வசதியை பயன்படுத்தி உங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுகிறதா என்று அறியலாம்.

Aadhaar authentication history

ஆதார் இந்தியாவில் அன்றாட வாழ்வின் இன்றியமையாத அங்கமாகிவிட்டது. அரசாங்க திட்டங்கள், வங்கி மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புகள் போன்ற பல்வேறு சேவைகளை அணுகுவதற்கான முதன்மை ஐடியாக இது செயல்படுகிறது. அதே நேரத்தில் கவனமாக இருக்காவிட்டால், ஆதார் தகவல்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Aadhaar usage

அடையாளத் திருட்டு, அங்கீகரிக்கப்படாத அணுகல் மற்றும் நிதி மோசடிக்கு கூட வழிவகுத்துவிடும். மோசடி செய்பவர்கள் திருடப்பட்ட ஆதார் விவரங்களைத் தங்களுக்கு வசதியாக பயன்படுத்துகிறார்கள். தவறான பயன்பாட்டினால் நிதி இழப்புகள் மட்டுமின்றி சட்ட சிக்கல்கள்கூட ஏற்படலாம்.

Latest Videos


Aadhaar safety

உங்கள் அனுமதியின்றி யாராவது உங்கள் ஆதாரைப் பயன்படுத்தக்கூடும் என்று நீங்கள் கவலைப்பட்டால், அதன் பயன்பாட்டைத் தொடர்ந்து சரிபார்க்க வேண்டியது அவசியம். உங்களால் எப்போதும் கண்காணிக்க முடியவில்லை என்றாலும், உங்கள் ஆதார் பயன்பாட்டின் வரலாற்றைச் சரிபார்க்க ஆதார் ஆணையம் (UIDAI) வழங்கும் வசதியைப் பயன்படுத்தலாம். பயணம், வங்கிச் சேவை உள்ளிட்ட பல சேவைகளுக்கு உங்கள் ஆதார் எண் எங்கு, எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதைப் பார்க்க இந்த அம்சம் உதவுகிறது.

Aadhaar security

ஆதார் ஆணையத்தின் https://portal.uidai.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று, லாக்-இன் செய்த “Authentication History” என்ற பகுதிக்குச் செல்லவும். அதில், ஆதார் பயன்பாட்டைச் சரிபார்க்க விரும்பும் தேதியைக் குறிப்பிடவும். இப்போது குறிப்பிட்ட தேதிக்குள் செய்யப்பட்ட ஆதார் பரிவர்த்தனை விவரங்கள் திரையில் தோன்றும். இதில், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை ஏதும் இருந்தால் செய்யவும். உடனடியாக ஆதார் ஆணையத்தில் புகார் அளிக்கவும்.

Aadhaar details

ஆதார் தொடர்பான புகார்களுக்காக ஆதார் ஆணையம் பிரத்யேகமான உதவி எண்ணை அறிவித்துள்ளது. உங்கள் ஆதார் அட்டையில் சந்தேகப்படும்படியான பரிவர்த்தனை நடந்திருப்பதாகக் கருதினால், ஆதார் ஆணையத்தின் 1947 என்ற எண்ணில் தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம். அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் புகார் எழுதலாம்.

Aadhaar Card

பாதுகாப்புக்காக ஆதார் பயோமெட்ரிக் தரவு பயன்பாட்டை லாக் செய்து வைக்கும் வசதியும் உள்ளது. ஆதார் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள "Lock/Unlock Aadhaar" என்ற பகுதிக்குச் சென்று உங்கள் ஆதார் அட்டையில் கைரேகை, கண்விழி பதிவு போன்ற பயோமெட்ரிக் தரவு பயன்பாட்டை தற்காலிகமாக லாக் செய்யலாம். பிறகு தேவைப்பட்டால் இதே வழியில் மீண்டும் பயன்பாட்டுக்கும் கொண்டுவரலாம்.

click me!