அடிக்கடி வரும் ஸ்பேம் கால் தொல்லைக்கு முற்றுப்புள்ளி! இதை மட்டும் பண்ணுங்க!!

First Published | Nov 25, 2024, 11:43 AM IST

நாளுக்கு நாள் ஸ்பேம் (Spam) அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஸ்பேம் அழைப்புகளைச் செய்கின்றனர். ஜியோ (Jio) இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வை வழங்குகிறது.

Block Spam

நாளுக்கு நாள் ஸ்பேம் (Spam) அழைப்புகள், எஸ்எம்எஸ்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகள் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஸ்பேம் அழைப்புகளைச் செய்கின்றனர். ஜியோ (Jio) இந்தப் பிரச்சினைக்கு எளிய தீர்வை வழங்குகிறது.

Spam calls

நீங்கள் ஜியோ நெட்வொர்க் பயனராக இருந்தால், MyJio செயலி மூலம் ஒரே கிளிக்கில் இந்த தேவையற்ற அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களைத் தடுக்க எளிய வழி உள்ளது.

Tap to resize

Block spam messages

OTP மற்றும் நம்பகமான பிராண்டுகளின் முக்கியமான செய்திகள் தொடர்ந்து கிடைக்கும். ஆனால், ஸ்பேம் அழைப்புகளை முழுமையாகத் தடுக்கலாம். சில விளம்பர அழைப்புகளை மட்டும் அனுமதிக்கும் வாய்ப்பும் உள்ளது.

Do Not Disturb

ஜியோ நெட்வொர்க்கில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தடுக்க, Do Not Disturb (DND) சேவையை இயக்க வேண்டும். இதன் மூலம் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMS உடன், சில டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளையும் தடுக்கலாம்.

MyJio DND service

பிளாக் செய்யவேண்டிய அழைப்புகள் மற்றும் மேசேஜ்களின் குறிப்பிட்ட வகையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பயனர்கள் DND சேவையை விருப்பப்படி பயன்படுத்தலாம். இதில் வங்கி, ரியல் எஸ்டேட், கல்வி, சுகாதாரம், சுற்றுலா எனப் பல ஆப்ஷன்கள் உள்ளன.

Spam alert

முழுமையான ஸ்பேம் தடுப்பை இயக்கினாலும், நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனம் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து போன் கால் மற்றும் SMS களைத் தொடர்ந்து பெறலாம். எனவே, பயனர்கள் முழுமையான ஸ்பேம் தடுப்பு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம். இது அதிக எண்ணிக்கையிலான ஸ்பேம் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தடுத்துவிடும்.

Latest Videos

click me!