Rain update: மக்களே உஷார்.. இந்தெந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை .. அலர்ட் செய்த வானிலை மையம்

By Thanalakshmi VFirst Published Feb 26, 2022, 2:50 PM IST
Highlights

தென் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த காரணமாக வரும் மார்ச் 2 ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று கூறப்பட்டுள்ளது.தென் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக1ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

2ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். தென்காசி, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு ஏதும் பதிவாகாத நிலையில், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஒன்றாம் தேதி தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

click me!