மதுரை விமான நிலையம் வந்தடைந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்கட்டண உயர்வு, மின்வெட்டு பிரச்சனை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து தனது கவலையைத் தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாகவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தி "போதையில்லா தமிழகத்தை" உருவாக்க வேண்டும் என்பதே விஜயகாந்தின் கனவு என்றும் அவர் குறிப்பிட்டார்.