ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்... அறிவித்தது தமிழக அரசு!!

Published : Dec 01, 2022, 12:11 AM IST
ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்... அறிவித்தது தமிழக அரசு!!

சுருக்கம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறபித்துள்ளது. 

ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறபித்துள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த தாமரைக்கண்ணன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதை அடுத்து தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு, கூடுதல் பிரிவு டிஜிபி ஆக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி சங்கர் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்..! சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக சங்கர் நியமனம்

இதேபோல் காவல்துறை தலைமை ஏடிஜிபியாக இருந்து வந்த வெங்கட்ராமன் கூடுதல் நிர்வாக பிரிவையும் சேர்த்து கவனிப்பார். அதேபோல் ஊர்க்காவல் படை, கமாண்டோ படை ஏடிஜிபி ஜெயராம் ஆயுதப்படை ஏடிஜிபியாக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக காவல்துறையின் பயிற்சி பள்ளி அகாடமிகளை டிஜிபி சைலேந்திரபாபு கூடுதல் பொறுப்பாக கவனித்துக் கொள்வார்.

இதையும் படிங்க: அதிமுகவின் போராட்டம் சிரிப்பை வரவழைக்கிறது… அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்!!

கோவை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மதிவாணன் போக்குவரத்து பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். கோவை போக்குவரத்து பிரிவு  அசோக்குமார் சென்னை சைபர் விரிவுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். கடலோர காவல் படையின் துணை ஆணையர் செல்வகுமார், தமிழ்நாடு கமாண்டோ படையின் எஸ்பியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?