TN Budget 2022-23: தமிழகத்துக்கு ரூ.20ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்: மத்திய அரசு மீது பிடிஆர் குற்றச்சாட்டு

By Pothy RajFirst Published Mar 18, 2022, 12:06 PM IST
Highlights

TN Budget  2022-23:ஜிஎஸ்டி இழப்பீடு முறை முடியும்போது தமிழக அருக்கு ரூ.20ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். தேசத்தின் வளர்ச்சியில் 10 சதவீதம் தமிழகத்தின் பங்கு இருந்தும் உரிய பிரதிநிதித்துவ நிதி ஒதுக்கீடு இல்லை என்று பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் குறிப்பிட்டார்.

ஜிஎஸ்டி இழப்பீடு முறை முடியும்போது தமிழக அருக்கு ரூ.20ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். தேசத்தின் வளர்ச்சியில் 10 சதவீதம் தமிழகத்தின் பங்கு இருந்தும் உரிய பிரதிநிதித்துவ நிதி ஒதுக்கீடு இல்லை என்று பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் குறிப்பிட்டார்.

பட்ஜெட் 

2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். அவர் பேசியதாவது:

பள்ளிக் கல்வித்துறைக்கு கூடுதலாக ரூ.4300 கோடி : பேராசிரியர் அன்பழகன் திட்டம் அறிமுகம்

வாட் வரி

தமிழகத்தில் வாட் வரி நடைமுறையில் இருந்தபோது, அரசுக்கு கிடைத்த வரிவருவாய் அளவு, தற்போது ஜிஎஸ்டி வரி வருவாய் நடைமுறைக்குவந்தபின் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் கொரோனா பெருந்தொற்று அனைத்து மாநிலங்களிலும் வருவாய் ஆதாரங்களைப் பாதித்துள்ளது. 

இழப்பு

ஜிஎஸ்டி வரியில் மாநிலங்களுக்கான இழப்பீட்டை 30-06-2022 வரை மட்டுமே மத்திய அரசு வழங்கும் அதன்பின் வழங்காது. ஜிஎஸ்டி வரியில் இழப்பீட்டை மத்திய அரசு நிறுத்தும்பட்சத்தில் தமிழக அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். 

ஆதலால், இழப்பீடு வழங்குவதை கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

ஹாப்பி நியூஸ்.. இனி Ph.D. படிக்க P.G தேவையில்லை..புதிய நடைமுறையின் சிறப்பு அம்சங்கள்..முழு விவரம்..

உரியநிதி இல்லை

நாட்டின் மக்கள் தொகையில் தமிழகத்தின் பங்கு 6.12%. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 10%. 
ஆனால், தமிழகத்துக்கு  இவற்றுக்கு ஏற்ற பிரதிநிதித்துவ நிதிப்பகிர்வை மத்திய அரசு தமிழகத்துக்குவழங்கவி்லலை. 15-வது நிதிக்குழுவில் தமிழகத்துக்கான நிதிப்பகிர்பு வெறும் 4.079 சதவீதம்தான்.

நிதி போதாது

உள்ளாட்சிஅமைப்புகளுக்கு மானியமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.21,246 கோடியை 15-வது நிதிக்குழு ஒதுக்கியுள்ளது. ஆனால், 14-வது நிதிக்குழு ரூ17 ஆயிரம் கோடிஒதுக்கிய நிலையில் 15-வது நிதிக்குழுகுறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது. 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த நிதியை மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசு பொறுப்பேற்கும் திட்டங்களுடன் இணைத்து வழங்காமல், தனியாக வழங்கிட வேண்டும்.

அயோத்தியை வென்ற அறநிலையத்துறை.. ஸ்டாலின் அடித்த சனாதன சிக்ஸர்..

இவ்வாறு நிதிஅமைச்சர் பழனிவேல் ராஜன் தெரிவித்தார்

click me!