Tamil Nadu Budget 2022 : தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.7ஆயிரம் கோடி குறையும்: நிதிஅமைச்சர் பெருமை

Published : Mar 18, 2022, 10:41 AM ISTUpdated : Mar 18, 2022, 11:11 AM IST
Tamil Nadu Budget 2022 : தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.7ஆயிரம் கோடி குறையும்:  நிதிஅமைச்சர் பெருமை

சுருக்கம்

Tamil Nadu Budget 2022 தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில்(2022-23) ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பெருமையாக்க குறிப்பிட்டார்.

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில்(2022-23) ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் பெருமையாக்க குறிப்பிட்டார்.

வருவாய் பற்றாக்குறை

2021-22ம் ஆண்டு திருத்தபட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அஇஅதிமுக அரசு தாக்கல் செய்த இடைக்காலபட்ஜெட்டில் இந்த வருவாய்பற்றாக்குறை ரூ.41,417 கோடியாக இருந்தது. இதைத் திருத்தி ரூ.58,692 கோடியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிதிப்பற்றாக்குறை குறைப்பு 

இந்நிலையில் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதிஅமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் இன்று தாக்கல் செய்துவருகிறார். அதில், “ தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை அளவு ரூ.7 ஆயிரம் கோடி குறைக்கப்பட்டுள்ளது. நிதிப்பற்றாக்குறை அளவு 4.61 சதவீதத்திலிருந்து 3.80சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி இழப்பீடு நடைமுறையை அடுத்த 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரப்படும். ஜிஎஸ்டி வரி கொண்டுவரப்பட்டபின் மாநில அரசின் வரிவருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் 10% தமிழகத்தின் பங்கு இருக்கும்போது, அதற்குரிய பிரதிநிதித்துவ நிதி கிடைப்பதில்லை. ” எனக் குறிப்பிட்டார்

 ஆனால், 2021-22ம் ஆண்டுக்கான திருத்த பட்ஜெட்டில் , 2022-23ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.36,376.03 கோடியாகக் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டது. திருத்தபட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.68 கோடி என மதிப்பிடப்பட்ட நிலையில், அதிலிருந்து ரூ.7 கோடி மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

திருத்த பட்ஜெட்

2021-22ம் ஆண்டு திருத்த பட்ஜெட்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை விகிதம் 4.33 சதவீதமாக இருக்கும் என்றும்,  இது 2022-23ம் ஆண்டில் 3.49%மாக குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை, 3.80% குறைக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்
விஜயை வைத்து பூச்சாண்டி..! வெறுப்பின் உச்சத்தில் ஸ்டாலின்..! காங்கிரஸை கழற்றிவிட திமுக அதிரடி முடிவு..!