குன்றக்குடி அடிகளார் முதல் தேச மங்கையர்க்கரசி வரை… தமிழக கோவில்களை பாதுகாக்க.. முதல்வரின் ‘மாஸ்டர்’ பிளான்

By Raghupati RFirst Published Jan 7, 2022, 8:08 AM IST
Highlights

இந்து சமய அறநிலையத் துறையில் உயர்நிலை ஆலோசனைக் குழு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையில், அனைத்து இந்து கோயில்களிலும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும், கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்துவதற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த உயர்நிலைக் குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைவராகவும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்கள் துணைத் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 17 பேர் கொண்ட இந்த குழுவில், அலுவல் சாரா உறுப்பினர்களாக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், சு.கி.சிவம், ஸ்ரீமத் வராக மகாதேசிகன், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருப்பார்கள்.

மேலும்,  இந்த குழுவில் முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், நீதியரசர் டி. மதிவாணன் (ஓய்வு), திரு.கருமுத்து தி.கண்ணன், முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார், திரு.ந. இராமசுப்பிரமணியன், திரு. தரணிபதி ராஜ்குமார், திரு.மல்லிகார்ஜீன் சந்தான கிருஷ்ணன், திருமதி ஸ்ரீமதி சிவசங்கர், திருமதி தேச மங்கையர்க்கரசி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

click me!