வாக்காளர் அடையாள அட்டையில் புதிய மாற்றம்!யாருக்கெல்லாம் வழங்கப்படும் என தெரியுமா.? தேர்தல் ஆணையம் புதிய தகவல்

By Ajmal KhanFirst Published Jan 30, 2023, 2:10 PM IST
Highlights

புதிய வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க இருப்பதாகவும், அதில் முன்னுரிமையாக புதிய வாக்காளர் அடையாள அட்டையை ஈரோடு கிழக்கு தொகுதியில் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே வாக்காளர் அட்டை

இந்திய நாட்டின் குடிமக்களாக உள்ள அணைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டையானது உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை ஒரு சில மாநிலங்களில் வேறு வடிவில் அச்சிடப்பட்டு வருகின்றன. இனி நாடு முழுவதும் ஒரே சீரான வாக்காளர் அடையாள அட்டை இருக்கும் வகையில் புதிய அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கனவே மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. க்யூஆர் கோடு, ஹோலோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் ஏற்கனவே அதில் இடம் பெற்றுள்ளன.

புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி..! சைபர் கிரைமில் புகார் அளித்து அதிரடி காட்டிய காயத்ரி

பாதுகாப்பு அம்சங்கங்களோடு புதிய ஐடி

இப்போது, போலி அட்டைகளை உருவாக்க முடியாதபடி கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள்ளேயே பொருத்தப்படும். ’கோஸ்ட் இமேஜ்” என்ற புதிய அம்சம் சேர்க்கப்படும். க்யூஆர் கோடுடன் மிகச்சிறிய அளவிலான எழுத்து (பூதக்கண்ணாடி மூலமாக மட்டுமே பார்க்க முடியும்) அச்சிடப்படும். இந்த அம்சங்களுடன் நாடு முழுவதும் ஒரே சீரான புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்படுகின்றன. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்ததும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 5-ந் தேதி வெளியிடப்பட்டது.

ஈரோடு தேர்தலுக்கு முன்னுரிமை

அதில்10.17 லட்சம் பேர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதிதாகச் சேர்த்துள்ளனர். திருத்தங்களை மேற்கொள்வதற்காக 2.15 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 12.32 லட்சம் பேருக்கு புதிதாக வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை 2 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களைச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளை வழக்கும் நிலையில், இடைத் தேர்தல் நடக்க இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள புதிய வாக்காளர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காயத்ரி ரகுராமின் மார்பிங் புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி.! தொண்டர்களுக்கு திடீர் அட்வைஸ் சொன்ன அண்ணாமலை

ஆதார் எண்ணை இணைக்கும் பணி

இதற்கிடையே, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் நம்பரை இணைப்பதற்காக விவரங்களைக் கோரும் பணியும் நடந்து வருகிறது. இதுவரையில் 63.17 சதவீத வாக்காளர்களிடம் இருந்து ஆதார் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் (6.20 கோடி) ஒப்பிட்டுப் பார்க்கும் போது 3.91 கோடியாகும் என் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

கூட்டணி கட்சி என்பதற்காக பாஜகவிடம் ஆதரவு கேட்டோம்..! கொடுத்தால் சரி..! இல்லைனா..? மாஜி அமைச்சர் பரபரப்பு தகவல்

click me!