புதுவையில் தொடங்கியது ஜி20 அறிவியல் மாநாடு

By Velmurugan sFirst Published Jan 30, 2023, 12:22 PM IST
Highlights

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் தொழில்நுட்ப மாநாடு புதுச்சேரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட  ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் 75க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆண்டு ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று நடத்துகிறது. வரும் செப்டம்பர் மாதம் இந்த மாநாடு தொடங்கும் என தெரிகிறது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க இந்தியா முழுவதும் 200 நகரங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. பல்வேறு தலைப்புகளில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்களும் நடைபெறுகின்றன. அதன்படி புதுச்சேரியில் இரண்டு நாட்கள் நடைபெறும், ஜி20 பிரதிநிதிகள் மாநாடு இன்று தொடங்கியது. புதுச்சேரி மரப்பாலத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று காலை 9.30 மணிக்கு ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக அறிவியல் 20 மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அரியலூரில் புயல் வேகத்தில் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி, பலர் படுகாயம்

இந்த மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா, துருக்கி, சுவீடன், தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா, ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 75 பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். கடந்தாண்டு ஜி.20 மாநாடு நடத்திய இந்தோனேசியா, நடப்பு ஆண்டு தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா, அடுத்த ஆண்டு தலைமை பொறுப்பேற்கவுள்ள பிரேசில் நாடுகளின் தலைமை உரையுடன் மாநாடு தொடங்கியது.

நிலமற்ற கூலிகளாக தமிழர்கள் மாற்றப்படுவார்கள் - சீமான் எச்சரிக்கை

உலகளாவிய முழுமையான ஆரோக்கியம், பசுமையான எதிர்காலத்திற்காக சுத்தமான ஆற்றலை ஏற்றுக்கொள்வது, அறிவியலை சமூகம் மற்றும் கலாச்சாரத்துடன் இணைத்தல் என்ற வகையில் விஞ்ஞானத்தின் மூலம் வரும் தீர்வுகளை செயல்படுத்து மூன்று முக்கிய தலைப்புகளில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றது. வெளிநாட்டு பிரதிநிதிகள் தங்கும் விடுதிகள், விமான நிலையம், மாநாட்டு அரங்கம் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் அரங்கை சுற்றிலும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

click me!