கருணை கொலை செய்ய அனுமதியுங்கள்; ஆளுநர் மாளிகையில் ஆட்டோ ஓட்டுநர் தர்ணா

By Velmurugan s  |  First Published Jan 23, 2023, 7:20 PM IST

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை பார்க்க அனுமதி மறுத்ததால் எலி மருந்து சாப்பிட்டு இதே இடத்தில் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியவரால் ஆளுநர் மாளிகை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கடலூரை சேர்ந்தவர் அமுதவன். ஆட்டோ ஓட்டுநரான இவர் சிவந்தி ஆதித்தனார் பேரவையின் கடலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி அடுத்த லாஸ்பேட்டை சாந்தி நகரில் குடியேறி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேலும் அவர் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அரசு மருத்துவர்கள் அவரை வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறும் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவர் தன்னை பிழைக்க முடியாது என்று சொன்ன பிறகு தன்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் தனக்கு மருத்துவ செலவுக்கு உதவி செய்ய வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து மனு அளித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

கல்லூரியை ஒருமுறை கூட பார்க்காமல் பட்டம்பெறுபவர்கள் தான் எய்ம்ஸ் மாணவர்கள் - எம்.பி.வெங்கடேசன்

ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தகவலும் இல்லாததால் இரண்டு முறை துணைநிலை ஆளுநர் தமிழிசையை பார்க்க அவர் முயற்சி செய்தும் அவரால் சந்திக்க முடியவில்லை. இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வந்த அமுதவன் ஆளுநரை பார்க்க வேண்டும் என்று அங்கிருந்த காவலர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள் ஆளுநர் இல்லை அவரை பார்க்க முடியாது என்று அனுமதி மறுத்தனர். இதனால் ஆளுநர் மாளிகை அருகிலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அமுதவனை சமாதானப்படுத்தும் போது திடீரென்று அவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறி விட்டதால்  என்னை வாழ விடுங்கள் அப்படி இல்லை என்றால் என்னை கருணை கொலை செய்து சாவ விடுங்கள் என்று புலம்பினார்.

அரியலூரில் அரை பவுன் மோதிரத்திற்காக விவசாயி அடித்து கொலை? 

 மேலும் தமிழிசையை பார்க்க எனக்கு அனுமதி மறுத்தால் எலிமருந்து மறைத்து வைத்திருக்கிறேன் அதை இதே இடத்தில்  தின்றுவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதால் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து அவரை சமாதானப்படுத்திய காவல் துறையினர் மீண்டும் அடுத்த முறை வந்து துணைநிலை ஆளுநரை பாருங்கள் என்று அறிவுரை கூறி அவரை  காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

click me!