புதுச்சேரி அருகே சமூக விரோத செயலை தடுக்க சிசிடிவி கேமரா அமைத்து கொடுத்த திமுக பிரமுகர் மீது ஒரு கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி, தமிழகம் எல்லையான கோட்டக்குப்பம் ரஹமத்நகரில், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மற்றும் வாலிபர்கள் கஞ்சா போதையில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர். இதையடுத்து கோட்டக்குப்பம் 27 வது வார்டு திமுக நகர துணை செயலாளர் பாபு, ரஹமத்நகர் முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து கொடுத்துள்ளார். மேலும் இருட்டான பகுதி முழுவதும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
காதல் திருமணம் செய்ததற்காக 3 ஆண்டுகள் பேசாத பெற்றோர்; விரக்தில் பெண் தற்கொலை
இதனால் ஆத்திரமடைந்த கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஷாஜகான், அஜித், அகமது அசேன், சோலை நகரை சேர்ந்த பென்னரசு ஆகியோர், சிசிடிவி கேமராவை உடைத்து சேதபடுத்தினர். மேலும் திமுக பிரமுகர் பாபுவை, வழிமறித்து 4 பேரும் கொடூரமாக தாக்குதல் நடத்தினர்.
கோவையில் கஞ்சா விற்பனையை ஊக்குவித்த சப் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது
பாபு மீது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தாக்குதல் நடத்தும் காட்சிகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி கேமரா பதிவின் அடிப்படையில் குற்றவாளிகள் 4 பேரையும் கோட்டக்குப்பம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.