தமிழகத்தில் பொதுத்தேர்வு தேதிகள் மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

By Velmurugan sFirst Published Jan 30, 2023, 12:56 PM IST
Highlights

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளின் பொதுத் தேர்வுக்கும், செய்முறை தேர்வுக்குமான கால இடைவெளி குறைவாக இருப்பதால் செய்முறை தேர்வுகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து முன்னதாகவே நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு, செய்முறை தேர்வுக்கான கால இடைவெளி குறைவாக உள்ளது. எனவே செய்முறை தேர்வுகள் அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து முன்னதாகவே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அரியலூரில் புயல் வேகத்தில் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி, பலர் படுகாயம்

அதன்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் பொதுத்தேர்வுகளுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 1ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் இன்று முதல் பிப்ரவரி 1ம் தேதி வரை விண்ணப்பிக்கும் வகையில் மறு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

புதுவையில் தொடங்கியது ஜி20 அறிவியல் மாநாடு

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை 2022- 23 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி 12ம் வகுப்பு பொதுத் தேர்வு  மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரையிலும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரையிலும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

click me!