நெல்லை மாநகர வேட்பாளர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், திமுக சார்பில் மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவிற்கு தலைவலியை உருவாக்கிய நெல்லை, கோவை
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி இடங்களையும் கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக நெல்லை மற்றும் கோவை மாநகராட்சி திமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. பல முறை கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைமையிடமும் புகார் செய்தனர். இதனையடுத்து நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணனும், கோவை மேயராக இருந்த கல்பனாவும் தங்களது மேயர் பதவியை ராஜினாமா செய்தனர்.
மேயர்கள் ராஜினாமா.?
நெல்லை மாநகர மேயராக இருந்த சரவணன் தனது பதவி விலகல் கடிதத்தை ஜூலை 8-ம் தேதியன்று மாநகராட்சி ஆணையாளர் தாக்ரே சுபம் ஞானதேவிடம் வழங்கினார். இதனையடுத்து மேயர் பதவி காலியானதாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் புதிய மேயரை தேர்ந்து எடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (ஆக. 5) நடைபெறும் என நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா அறிவித்துள்ளார். நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று மூத்த அமைச்சர்கள் கே.என். நேரு மற்றும் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது. அப்போது திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்கள், திமுக மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதிய மேயர் வேட்பாளர் யார்.?
இந்த கூட்டத்தில் திமுக சார்பாக போட்டியிடவுள்ள மேயர் பெயர் அறிவிக்கப்பட்டது. நெல்லை மாநகராட்சியில் 3 முறை தேர்வு செய்யப்பட்ட கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சரரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட கடிதத்தை மாமன்ற உறுப்பினர்களிடம் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு ஆகியோர் காண்பித்தனர். இந்தநிலையில் நாளை நடைபெறும் மறைமுக தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மேயராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
OOTY TOUR : ஊட்டிக்கு டூர் போறீங்களா.? குட் நியூஸ் சொன்ற சுற்றுலாத்துறை- என்ன அறிவிப்பு தெரியுமா.?