- Home
- Gallery
- OOTY TOUR : ஊட்டிக்கு டூர் போறீங்களா.? குட் நியூஸ் சொன்ற சுற்றுலாத்துறை- என்ன அறிவிப்பு தெரியுமா.?
OOTY TOUR : ஊட்டிக்கு டூர் போறீங்களா.? குட் நியூஸ் சொன்ற சுற்றுலாத்துறை- என்ன அறிவிப்பு தெரியுமா.?
இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டிக்கு லட்சக்கணக்கான மக்கள் சென்று வரும் வகையில், பைக்காரா அணையில் உள்ள படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணி முடிவடைந்துள்ள நிலையில் இன்று முதல் படகு சவாரி அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியின் சுற்றுலாதளங்கள்
வாட்டி வதைக்கும் வெயிலால் பாதிக்கப்படும் மக்களுக்கு சற்று இதமான சூழல் தந்து ஆறுதல் தருவது ஊட்டியாகும். நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு சென்று வருவார்கள். ஊட்டியில் தொட்டபெட்டா, பொட்டானிக்கல் கார்டன், ரோஸ் கார்டன், டீ தொழிற்சாலை, முதுமலை உள்ளிட்ட இடங்களோடு பைக்காரா படகு சவாரி முக்கிய பங்கு வகிக்கும். ஊட்டி – கூடலூர் சாலையில் 22 கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்கு மத்தியில் பைக்காரா அணை உள்ளது.
பைக்காரா அருவி
பைக்காரா அணையில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மிகப்பெரிய ஏரியாக உள்ள பைக்காரவில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு இல்லம் உள்ளது. இங்கு இயக்கப்படும் ஸ்பீட் படகில் செல்ல சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். ஊட்டி - கூடலூர் சாலையில் இருந்து 1.3 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக நடந்தே பைக்காரா படகு இல்லம் செல்லவேண்டும்.
Ooty Boat house
பைக்கார அருவியில் படகு சவாரி
நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய இந்த சாலையானது மிகவும் பழுதடைந்திருந்தது. இதனால் படகு இல்லம் வரும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல சிரமம்பட்டனர். எனவே, சாலையை சீரமைக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்றன.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
இதனால் 4 மாதங்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து இன்று முதல் சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்