Virudhunagar Car Accident: விருதுநகரில் பயங்கரம்! புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் துடிதுடித்து பலி!

Published : Aug 04, 2024, 07:26 AM ISTUpdated : Aug 04, 2024, 07:33 AM IST
Virudhunagar Car Accident: விருதுநகரில் பயங்கரம்! புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் துடிதுடித்து பலி!

சுருக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழ முடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (43). அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக்குழுவையும் நடத்தி வந்துள்ளார். 

விருதுநகரில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையேர புளிய மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கீழ முடிமன்னார் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் (43). அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் கலைக்குழுவையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று ஆசிரியர் பாலமுருகன் தனது கலைக்குழுவை சேர்ந்த சவ்வாஸ்புரம் பகுதியை சேர்ந்த மணி (18), ஆலடிபட்டியை சேர்ந்த சின்னத்துரை (22) உள்ளிட்ட 4 பேர் காரில் சொந்த வேலையாக வெளியூர் சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். காரை ஆசிரியர் பாலமுருகன் ஓட்டி வந்துள்ளார். 

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையில் நாளை முக்கியமான பகுதிகளில் மின்தடை!

அப்போது திருச்சுழி அருகே கல்லூரணியில் சாயல்குடி செல்லும் பிரதான சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ஆசிரியர் பாலமுருகன் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். 

இதையும் படிங்க:  School Student : இனி அரசு பள்ளிகள் காலை 9.15க்கு தொடங்கும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஈடுபாடுகளில் சிக்கிய 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!