மேகதாது விவகாரத்தில் கர்நாடகத்திடம் காசு வாங்கினாரா துரைமுருகன்? அண்ணாமலை சந்தேகம்

By Velmurugan s  |  First Published Aug 3, 2024, 11:05 PM IST

மேகதாது அணை விவகாரத்தில் திமுக அமைச்சர் துரைமுருகன் கர்நாடகாவிடம் காசு வாங்கிவிட்டாரோ என்ற சந்தேகம் எழுவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மேகதாது பகுதியில் அணை கட்டியே தீருவோம், இந்த விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என காநாடகா மாநில துணைமுதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

100 கி.மீ. வேகம்; எக்கச்சக்க வசதிகளுடன் சென்னை - காட்பாடியில் சீறிப்பாய்ந்த வந்தே மெட்ரோ ரயில்

Tap to resize

Latest Videos

undefined

இதற்கு திமுக அமைச்சர்கள் உள்பட திமுக நிர்வாககள் ஒருவர் கூட ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிடாமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. காவிரியில் தமிழகத்திற்கான நீரை திறந்துவிட மாட்டோம் என கர்நாடகா தொடர்ந்து விடாப்பிடியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது மழை பெய்ததால் இந்த பிரச்சினையை மக்கள் மறந்துள்ளனர்.

திண்டுக்கல்லில் ஒரே பைக்கில் சென்ற 4 பேர்; விபத்தில் மொத்த குடும்பத்தையும் காவு வாங்கிய கார்

ஆனால் தற்போது வரை திமுக உறுப்பினர்கள் கர்நாடகா துணைமுதல்வர் சிவக்குமாரையோ, கர்நாடகா அரசையோ கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாதது ஏன்? இந்த விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் உள்பட திமுக உறுப்பினர்கள் கர்நாடகாவிடம் பணம் பெற்றுவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளார்.

click me!