
ஈரோடு அருகே மினி வேன் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் வடவள்ளி முருகன் கோயில் அருகே வளைவில் வேகமாக திரும்பிய கார் கட்டுப்பாட்டை இழந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரி மீது நேருக்கு நேர் மோதியது. அப்போது பின்னால் வந்த மற்றொரு காரும் விபத்து நடந்த கார் மீது மோதியது. இதில் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு காரும் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேரில் முகில் நிவாஷ் (21), கால்பந்து வீரர் தர்மேஷ் (18), ரோகித் (18) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க: Power Shutdown in Chennai: ஷாக்கிங் நியூஸ்.. தமிழகத்தில் இன்று எந்த பகுதிகளில் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்!
இதனையடுத்து அப்பகுதி மக்கள் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: இதுதான் நல்ல சான்ஸ்! இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் போட்றலாம்! கொலையாளிகளுக்கு இன்பார்ம் கொடுத்த பீரதிப்! யார் இவர்?
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் விபத்தில் ஈரோட்டை சேர்ந்த 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.