பன்றி காய்ச்சலுக்கு பள்ளி ஆசிரியை பலி?

By manimegalai aFirst Published Dec 29, 2018, 5:08 PM IST
Highlights

தாம்பரத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
 

தாம்பரத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

மேற்கு தாம்பரம், காந்தி சாலையை சேர்ந்தவர் சந்திரகுமாரி (49). இவர், சென்னை பழவந்தாங்கலில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வரும் மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பிறகு கடந்த 23ம் தேதி சென்னை திரும்பினார். தொடர்ந்து, 26ம் தேதி சந்திரகுமாரிக்கு காய்ச்சல் ஏற்பட்டு முடிச்சூர் - தாம்பரம் பிரதான சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், அங்கும் காய்ச்சல் குணமாகாததால் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சந்திரகுமாரியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சந்திரகுமாரி உயிரிழந்தார். போரூர் தனியார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. மேலும், அவர் இறந்ததற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

click me!