தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நாளை அக்டோபர் 29ஆம் தேதி துவங்கக்கூடும் என்றும், 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

10:35 PM (IST) Oct 28
மனிதர்களைக் கொல்வதில் காட்டுமிராண்டித்தனத்தின் எல்லா வரம்புகளையும் தாண்டிய தொடர் கொலையாளிகள் உலகில் சிலர் இருந்திருக்கிறார்கள். உலகின் மிகவும் பயங்கரமான 10 கொலையாளிகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
09:37 PM (IST) Oct 28
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் 34 சதவிகிதம் குறைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
09:00 PM (IST) Oct 28
கோவையில் கடந்த 23ம் தேதி நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக, வியாழக்கிழமை தேசிய புலனாய்வு முகமை அமைப்பு தனது விசாரணையை தொடங்கியது.
08:59 PM (IST) Oct 28
தமிழகத்தில் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் மட்டும் என்ஐஏ நான்கே நாட்களில் வந்து விசாரணையை தொடங்கி உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
06:46 PM (IST) Oct 28
நவம்பர் 1ம் தேதி விடுமுறை என்று தமிழக அரசு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
06:15 PM (IST) Oct 28
மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
06:08 PM (IST) Oct 28
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் சென்னையில் கடந்த 3 மாதங்களில் பதிவான அடிதடி, கொடுங்காயம் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.மேலும் படிக்க
05:52 PM (IST) Oct 28
பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்திக்க உள்ளனர்.
05:17 PM (IST) Oct 28
இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள Constable, Head Constable பணியிடங்களுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.மேலும் படிக்க
04:42 PM (IST) Oct 28
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட வருகின்றனர்.
04:30 PM (IST) Oct 28
ஆரூர் அடுத்த புதனன்கடியில் உள்ள ஸ்ரீ குமாரவிலாசம் கோவிலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தேறியுள்ளது. சாமியின் கருவறையை உடைத்து நுழைந்த திருடன், அங்கிருந்த தங்க நகைகளை திருடி சென்றுள்ளான்.மேலும் படிக்க
04:15 PM (IST) Oct 28
கோவையில் முழு அடைப்புக்கு பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
03:52 PM (IST) Oct 28
இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
03:04 PM (IST) Oct 28
ன்று மதியம் இவரது கடைக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், கோபால கிருஷ்ணனை தாக்கி, கடையில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றுள்ளனர்.மேலும் படிக்க
03:04 PM (IST) Oct 28
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், விரைவில் தேர்வு முடிவுகள் வெளிவரும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
01:36 PM (IST) Oct 28
கோவை சம்பவம் தொடர்பாக, தமிழக முதல்வர் இதுவரை வாய் திறக்காமல், இதைப்பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பில் இருப்பவர், காவல்துறைக்கு தலைவராக இருக்கக்கூடியவர் மௌனம் சாதிப்பது தமிழக மக்களுக்கு வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. இனியாவது தமிழ்நாடு அரசாங்கம் தீவிரவாதிகள் விஷயத்தில் கடுமையான போக்கை கடைபிடிக்க வேண்டும்.
01:34 PM (IST) Oct 28
துணிவு படத்தின் தமிழக திரையரங்க உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதன்மூலம் 9 ஆண்டுகளுக்கு பின் விஜய் - அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது உறுதியாகி உள்ளது. இந்த பொங்கல் ரேஸில் வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் படிக்க
01:17 PM (IST) Oct 28
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் பணியிடத்துக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மேலும் படிக்க
01:10 PM (IST) Oct 28
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
12:53 PM (IST) Oct 28
வயநாடு வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வழி தவறிய ஊருக்கு புகுந்த புலியை பிடிக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். 12 வயதாகும் ஆண் புலி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4,30 மணியளவில் குடியிருப்புக்குள் நுழைந்த போது வனத்துறையினர் வைத்திருந்த வலையில் சிக்கியதுமேலும் படிக்க
12:29 PM (IST) Oct 28
கிராம சபை கூட்டங்களைபோல, தமிழ்நாட்டில் முதல்முறையாக மாநகர சபை கூட்டம் நவம்பர் 1-ம் தேதி முதல் நடைபெற உள்ளது. பல்லாவரம் அருகே பம்மல் 6வது வார்டில் நவம்பர் 1ம் தேதி மாநகர சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொள்கிறார்.
12:08 PM (IST) Oct 28
கன்னியாகுமரியில் வேலைக்கு வராத விசைப்படகு ஓட்டுனரையும் அவரது மனைவியையும் ஆபாச வார்த்தைகளால் தீட்டி, வீடு புகுந்து தாக்கிய திமுக நிர்வாகி மீது நடவடிக்கை கோரி பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக பிரமுகர் இன்பம் தாக்குதல் நடத்துவது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
11:10 AM (IST) Oct 28
செங்கல்பட்டு பகுதியில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகம் செய்பவர்களின் கைவரிசையா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
11:09 AM (IST) Oct 28
சட்டம் மற்றும் ஒழுங்கு என்பது மாநிலங்களின் பொறுப்பு. சட்டம், ஒழுங்கு தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சவால்களுக்கு மத்தியில், பண்டிகைகளின் போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
11:04 AM (IST) Oct 28
நேற்று காலை வழக்கம் போல் எழுந்த உமா, தனது மகளை எழுப்ப அறைக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீமதி சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தனது மகளை பிடித்து கதறி அழுதார்.மேலும் படிக்க
09:26 AM (IST) Oct 28
மாநகராட்சி டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை வருகிறது. நேற்று வேலுமணி தரப்பு வாதிட்டை தொடர்ந்து இன்று அரசு தரப்பு வாதிட உள்ளது.
08:58 AM (IST) Oct 28
தமிழகத்தில் நிலவும் போதை பொருட்களின் ஆதிக்கத்தை ஒழிக்கவும், பள்ளிகன் மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்டறிந்து தடுக்கவும், தமிழக அரசு புதிய செயல் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என சசிகலா வலியுறுத்தியுள்ளார்.
08:52 AM (IST) Oct 28
சர்ச்சைகளுக்கு பெயர் போன சசிகலா புஷ்பாவின் டெல்லி வீட்டிலிருந்த பொருட்களை அதிகாரிகள் வெளியே வைத்துவிட்டு சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08:22 AM (IST) Oct 28
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் தடை ஏற்படும்.
07:31 AM (IST) Oct 28
Today Numerology Predictions Palangal: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, (28 அக்டோபர் 2022) ஆம் தேதியன்று, உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணித பலன்கள் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
07:30 AM (IST) Oct 28
குஷ்பூ குறித்து திமுக நிர்வாகி ஆபாசமாக பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக எம்.பி. கனிமொழி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
07:30 AM (IST) Oct 28
அரசியல் அடிச்சுவடு தெரியாதவர்கள் கட்சியின் தலைவராக ஆக்கினால் இப்படித்தான் அநாகரிகமாக பேசுவார்கள் என அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.