Asianet Tamil News highlights: முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்னும் ஓரு வாரத்திற்குள்ளாக தோனி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்.

11:54 PM (IST) May 31
கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது, நான்காவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
4வது காலாண்டில் ஜிடிபி 6.1% உயர்வு; பொருளாதார வளர்ச்சி 7.2%
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 2022-23 ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி புள்ளிவிவரங்கள் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் இந்தியப் பொருளாதாரத்தின் திறனை காட்டுவதாக உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
நம்பிக்கைக்குரிய பாதையில் இந்தியப் பொருளாதாரம்! ஜிடிபி வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!
11:51 PM (IST) May 31
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார். இரவு 10 மணி அளவில் சென்னை திரும்பியதும் பேட்டி அளித்த முதல்வர், ரூ.3,233 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார்.
04:07 PM (IST) May 31
சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை சம்யுக்தா, தற்போது அவரை பிரிந்த பின்னர் அவரைப்பற்றி பகீர் தகவலை வெளியிட்டு உள்ளார்.
03:23 PM (IST) May 31
2022ம் ஆண்டின் குளோபல் ஆட்டோமேக்கர் மதிப்பீடு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மின்சார வாகனச் சந்தையில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
02:53 PM (IST) May 31
இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02:45 PM (IST) May 31
தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளது புது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
02:14 PM (IST) May 31
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு மூத்த மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்து பயிற்சி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
02:13 PM (IST) May 31
கைது செய்ததால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மல்யுத்த வீரர்கள் கூறுவது ஏற்புடையதல்ல. கவிஞர் வைரமுத்து மீது பாடகி ஒருவர் பாலியல் புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? மல்யுத்த வீரர்களுக்கு உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லா? விளையாட்டு வீராங்கனைகளுக்கு உச்சநீதிமன்றத்தின் மீதே நம்பிக்கை இல்லை என்றால் யாரை நம்புவார்கள் என்று தெரியவில்லை என அண்ணாமலை கூறியுள்ளார்.
02:09 PM (IST) May 31
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்மூலம் தொகுதி-4 தேர்வுக்கான தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் வந்துள்ள நிலையில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
01:05 PM (IST) May 31
"ஹே ஒன்னத்தான்... ஒன்னத்தான்..." என இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
12:41 PM (IST) May 31
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவை விமர்சித்த ராகுல் காந்தி, உண்மையான பிரச்சினைகளில் மோடி அரசால் செயல்பட முடியாது என்பதால், பிரதமர் இந்த காரியத்தை செய்தார் என்று கூறி உள்ளார்.
12:24 PM (IST) May 31
பள்ளியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் கேரள சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
11:09 AM (IST) May 31
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புராஜெக்ட் கே திரைப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் ரூ.150 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
11:05 AM (IST) May 31
அமைச்சர் செந்தில்பாலாஜி மீது டாஸ்மாக் கமிஷன், சொத்து குவிப்பு, மிரட்டல் போன்ற குற்றசாட்டுகள் தொடர்ச்சியாக எழுந்து வந்தது.
10:54 AM (IST) May 31
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
10:54 AM (IST) May 31
அரிக்கொம்பன் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க தமிழ்நாடு அரசு பல துறைகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கையை எடுத்து வருகிறது என வனத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
09:23 AM (IST) May 31
பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை காண்பித்து மாணவர்கள் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது.
08:26 AM (IST) May 31
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதலாவது நபர் கீர்த்திகா, 2வது நபர் ஹரிப்பிரியா ஆகிய 2 ஆசிரியர்கள் வழக்கில் இருந்து நீக்கியது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் எங்களுக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீமதியின் தாய் கூறியுள்ளார்.
08:17 AM (IST) May 31
வட கொரியா வானில் ஏவிய உளவு செயற்கைக்கோள் கடலில் விழுந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
07:45 AM (IST) May 31
தமிழகத்தில் கருணாநிதியின் பெயர் பேசப்படும் வகையில் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு வருகிறார். ஆனால் அரசாணை 354-ஐ மட்டும் நடைமுறைப்படுத்தாமல் மறுத்து வருவதுதான் வேதனையாக உள்ளது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு கூறியுள்ளது.
07:30 AM (IST) May 31
சென்னையில் 375வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
07:09 AM (IST) May 31
வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மதிமுகவின் அவைத்தலைவராக இருந்தத திருப்பூர் துரைசாமி அவர்கள் அந்த பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். திமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என திருப்பூர் துரைசாமி கூறினார். அன்று திமுகவை எதிர்த்த துரைசாமி இன்று திமுகவுடன் மதிமுகவை இணைக்க கூறுகிறார். தேர்தலின் போது திமுகவின் வெற்றிக்கு எதிராக திருப்பூர் துரைசாமி செயல்பட்டார் என வைகோ அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.