The Global Automaker Rating 2022: மின்சார வாகனச் சந்தையில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?
2022ம் ஆண்டின் குளோபல் ஆட்டோமேக்கர் மதிப்பீடு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மின்சார வாகனச் சந்தையில் யார் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஒரே வாகன உற்பத்தியாளர் டாடா மட்டுமே. ICCT ஆனது 6 ஆட்டோமொபைல் சந்தைகளில் தரவுகளை சேகரித்து விரிவாக பகுப்பாய்வு செய்தது. சீனா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் அமெரிக்கா ஆகியவை இதில் அடங்கும்.
தூய்மையான போக்குவரத்துக்கான சர்வதேச கவுன்சிலின் (ICCT) புதிய அறிக்கையின்படி, உலகின் டாப்-20 பெரிய வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களை பூஜ்ஜிய மாசு உமிழ்வு வாகனங்களாக மாற்றுகின்றனர். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஒரே வாகன உற்பத்தியாளர் டாடா மட்டுமே இருக்கின்றனர். ICCT ஆனது 6 ஆட்டோமொபைல் சந்தைகளில் தரவுகளை சேகரித்து விரிவாக பகுப்பாய்வு செய்தது. சீனா, ஐரோப்பா, இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் அமெரிக்கா ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நிறுவனம் டாடா மட்டுமே.
முதல் இடம்:
குளோபல் ஆட்டோமேக்கர் மதிப்பீடு 2022, பூஜ்ஜிய-உமிழ்வு வாகனங்களுக்கு (ZEVs) மாறுவதை உலகளாவிய வாகன உற்பத்தியாளர்கள் எவ்வாறு மதிப்பிடுகிறார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது என்று சொல்லலாம். இந்த ஆய்வின் முதல் பதிப்பில் டெஸ்லா மற்றும் BYD முதலிடத்தில் இருந்தன. 6 உலகளாவிய சந்தைகளில் விற்பனை, செயல்திறன் மற்றும் ZEV உத்தி ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் சிறந்த 20 உற்பத்தியாளர்களை இது மதிப்பிடுகிறது. ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட ஐந்து உற்பத்தியாளர்களும், இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டாடாவும் மதிப்பீட்டில் கீழே உள்ளன.
இந்த மதிப்பீடு டிசம்பர் 2022 வரை திரட்டப்பட்ட தரவை அடிப்படையாகக் கொண்டது. சந்தையில் உள்ள நிறுவனங்களின் தற்போதைய நிலையுடன் டிகார்பனைசேஷன் உட்பட பல உத்திகள் குறித்து இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. ICCT ஆல் பகுப்பாய்வு செய்யப்பட்ட 20 வாகன உற்பத்தியாளர்களில், மதிப்பீடுகள் ஆறு சந்தைகளில் 89 சதவீத விற்பனையையும், உலகளாவிய இலகுரக வாகன விற்பனையில் 65 சதவீதத்தையும் கொண்டுள்ளது.
குளோபல் ஆட்டோமேக்கர் மதிப்பீடு 2022:
இந்த மதிப்பீட்டின்படி, BYD என்பது முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் ஒரே வாகன உற்பத்தியாளர் ஆவார்கள். இந்த நிறுவனம் டெஸ்லாவுக்கு போட்டியாக உள்ளது. இந்த மதிப்பீட்டில் டெஸ்லா முதலிடத்தில் உள்ளது. இது ZEV களின் மிகப்பெரிய உற்பத்தியாளர் ஆகும். ஆனால் பல அளவீடுகளில் குறைவான செயல்திறன் கொண்டது. பாரம்பரிய வாகன உற்பத்தியாளர்களான BMW மற்றும் Volkswagen ஆகியவை EV மாற்றம் குறித்து தீவிரமாக உள்ளன.
இந்த ஆய்வானது 20 பெரிய வாகன உற்பத்தியாளர்களில் 6 விற்பனையில் தங்கள் போட்டியாளர்களை விட பின்தங்கியுள்ளன என்பதையும் வெளிப்படுத்துகிறது. இவற்றில் ஐந்து ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டவை. இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரே நிறுவனம் டாடா தான். ஆனால் அதன் குறைந்த மதிப்பெண்ணுக்கு குறைந்த ZEV விற்பனை, வரையறுக்கப்பட்ட ZEV உற்பத்தி மற்றும் உத்தியின்மை ஆகியவை காரணம் ஆகும்.
இதையும் படிங்க..புது ஸ்டைலில்.. மாஸாக களமிறங்கும் ஓப்போ ரெனோ 10 சீரிஸ் - விலை எவ்வளவு தெரியுமா?