பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் சி.டி.ஆர் நிர்மல் குமாருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10:39 PM (IST) Mar 05
வெப்ப அலை மூலமாக மிகப்பெரிய அழிவை நாம் சந்திக்க வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளார் அமைச்சர் மெய்யநாதன்.
10:24 PM (IST) Mar 05
One Rank One Pension திட்டத்தில் வங்கிக்கணக்கில் பணம் யாருக்கு கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
09:59 PM (IST) Mar 05
கடந்த ஒன்றை ஆண்டுகளாக கட்சிப்பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். - தமிழக பாஜக.
08:42 PM (IST) Mar 05
சிபிஐ, அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துவதாக கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்கட்சியை சேர்ந்த 9 தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
07:09 PM (IST) Mar 05
பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த சி.டி.ஆர் நிர்மல் குமார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
06:39 PM (IST) Mar 05
திமுக தலைமையிலான அரசு தற்போது எடுத்து இருக்கும் இந்த மோசமான நடவடிக்கையின் காரணமாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்று கூறியுள்ளார் சசிகலா.
05:26 PM (IST) Mar 05
31 வயது பெண் ஒருவர் 13 வயது சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
04:57 PM (IST) Mar 05
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 16வது எபிசோட்.
03:30 PM (IST) Mar 05
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திமொழிக்காரர்களிடம் அரைக்கால் வேக்காட்டு அண்ணாமலைகள் இதுபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்று தெரிவித்துள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
03:05 PM (IST) Mar 05
பாஜக ஐடி விங் மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார் தற்போது அதிமுகவில் இணைந்தார்.
01:00 PM (IST) Mar 05
வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கூறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீசார் 4 பிரிவிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், திராணி இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என திமுக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
11:05 AM (IST) Mar 05
தமிழகத்தில் நடக்காத கலவரம் ஒன்றை நடந்ததாக போலியான செய்திகளை பரப்பி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்துவது பாஜகவும் அதன் நிர்வாகிகளும் தான் என கேஎஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
10:38 AM (IST) Mar 05
நாடு முழுவதும் புதிதாக குளிர் காய்ச்சல் மற்றும் இருமல் நோய் பரவி வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ள நிலையில், இதற்கு A H3n2 எனும் புதிய வைரஸ் தான் காரணம் என தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க..
09:35 AM (IST) Mar 05
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், போலி டாக்டர் பட்டம் கொடுத்த விவகாரத்தில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பின் இயக்குனர் ஹரிஷ் தலைமறைவாக இருந்த நிலையில் ஆம்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
08:35 AM (IST) Mar 05
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் போட்டியிடும் போது எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இதையே மாபெரும் வெற்றியாக கருதுகிறோம் என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
08:34 AM (IST) Mar 05
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்கு வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல கோவையில் இருந்து பாட்னாவிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
07:33 AM (IST) Mar 05
ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்திசாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், இந்த தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசிக்க வருகிற 9 ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
07:06 AM (IST) Mar 05
வெறுப்பு அரசியலுக்காக தமிழ்நாட்டு மாண்பை சீர்குலைக்கும் செயலில் பாஜக ஈடுபட்டுள்ளதாக விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.