செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வருகை தந்தார். தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழர்களின் வரலாறு, பாரம்பரியம், கலை, இலக்கியம் ஆகியவற்றை பறைசாற்றும் கலைநிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. உலக நாயகன் கமல்ஹாசனின் பின்னணி குரலில் இந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
10:02 PM (IST) Jul 28
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்தை விட சிறந்த இடம் இருந்திருக்க முடியாது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இதுக்குறித்து பேசிய அவர், இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது பெருமைக்குரியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை குறுகிய காலத்தில் சிறப்பாக தமிழ்நாடு அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கு வரலாற்று ரீதியாக செஸ் விளையாட்டுடன் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் சதுரங்க வல்லபநாதர் கோவில் உள்ளது. தமிழ்நாட்டில் இது நடப்பது நம் நாட்டுக்கே பெருமை. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த தமிழகத்தை விட சிறந்த இடம் இருந்திருக்க முடியாதுஎன்று தெரிவித்தார்.
09:32 PM (IST) Jul 28
நடிகர் கமலஹாசன் குரலில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தமிழ் நிகழ்த்து கலை நடத்திக் காண்பிக்கப்பட்டது. அதில் தமிழ சோழ, பாண்டிய நிலங்களாக பிரித்து ஆண்டனர் என்பது குறித்தும், தமிழர்கள் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கினார்கள் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் படிக்க
09:31 PM (IST) Jul 28
தமிழர்கள் போர் மரபு கொண்டவர்கள் என்பதற்கு கீழடியில் கிடைத்துள்ள ஆனைக் குப்பு என்ற சதுரங்க விளையாட்டிற்கான காய்கள் ஆதாரமாக உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார். மேலும் படிக்க
09:29 PM (IST) Jul 28
தமிழ்நாட்டுக்கும் செஸ் போட்டிக்கும் வரலாற்று ரீதியாக தொடர்புகள் உள்ளது என்றும், விளையாட்டிற்கென தனி கோயில் உள்ளது என்றும் பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். இந்தியாவின் செஸ் தலைநகரம் சென்னை என்றும் பல கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலம் தமிழகம் என்றும் அவர் பெருமிதத்துடன் பேசினார். மேலும் படிக்க
09:28 PM (IST) Jul 28
நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நான் கலந்து கொள்வேன் என பிரதமர் மோடி கூறியிருந்ததாகவும், அதேபோல அவர் கலந்து ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டுள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் படிக்க
08:10 PM (IST) Jul 28
குறைந்த நேரத்தில் செஸ் ஒலிம்பியாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து பல கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு கோயிகள் விளையாட்டுக்களை விளக்குவதாக இருக்கிறது. சதுரங்க விளையாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் நீண்ட தொடர்பு இருக்கிறது. இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
07:37 PM (IST) Jul 28
செஸ் ஒலிம்பியாட் ஜோதியை விஸ்வநாதன் ஆனந்த், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கினார். பிரதமரிடமிருந்து ஜோதியை பெற்ற இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகிய இருவரும் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிவைத்தனர்.
07:04 PM (IST) Jul 28
சென்னை செஸ் ஒலிம்பியாட் விழாவில்.. நடிகர் கமல்ஹாசன் கம்பீர குரலில் தமிழர்களின் வரலாற்றை விளக்கும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது
06:56 PM (IST) Jul 28
பிரதமர் மோடிக்கு 'மாமல்லபுர சிலை' பரிசு அளித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
06:33 PM (IST) Jul 28
தமிழகத்தை சேர்ந்த இளம் இசை கலைஞரான லிடியன் நாதஸ்வரம், இரு கைகளிலும் இரு பியானோக்களை வாசித்து வெளிநாட்டினரை வியக்கவைத்தார். மேலும் இரு கைகளிலும் இரு வேறு இசைகளை இசைத்ததுடன், கண்களை கட்டிக்கொண்டு பியானோ வாசித்து மிரட்டினார்.
விரிவாக படிக்க - செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா: ஒரே சமயத்தில் 2 பியானோக்களை வாசித்து தெறிக்கவிட்ட லிடியன் நாதஸ்வரம்
இதையும் படிங்க - இரு கைகளில் இரு பியானோ, இரு இசை..! உலகையே வியக்கவைத்த தமிழன்.. யார் இந்த லிடியன் நாதஸ்வரம்..?
06:26 PM (IST) Jul 28
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவரை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர்கள் வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வந்தார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. சதுரங்க கரை பதிப்பு தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
06:21 PM (IST) Jul 28
சென்னையில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் கோலாகலம்! - வெளிநாட்டவரையும் கவர்ந்து இழுக்கும் நம்ம ஊரு டான்ஸ்
06:17 PM (IST) Jul 28
அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக காரில் செல்லும் பிரதமர் மோடி வழிநெடுகிலும் நின்று வரவேற்பு அளிக்கும் தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.பரதநாட்டியம் , இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கு மலர்கள் தூவி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
06:17 PM (IST) Jul 28
வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ் நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.மேலும் படிக்க
06:17 PM (IST) Jul 28
வரலாற்றுச் சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவை பிரபல வீடியோ ஜாக்கி பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். ஆங்கிலம் தமிழ் நன்கு உச்சரிக்க கூடியவராக பாவனா ஒலிம்பியாட் செஸ் போட்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இடம்பெற்றுள்ளார்.
06:11 PM (IST) Jul 28
ஐஎன்எஸ் ஐஎன்எஸ் கடற்படை தளத்திலிருந்து சாலை மார்க்கமாக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கிற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பரதநாட்டியம் , இசைக்கருவிகல் வாசிக்கப்பட்டு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
05:56 PM (IST) Jul 28
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவரை தமிழக அரசு சார்பில் மூத்த அமைச்சர் வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் வந்தடைந்தார். அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார், இந்நிலையில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
05:45 PM (IST) Jul 28
செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை வந்தார். சென்னை விமானநிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளம் சென்று, அங்கிருந்து சாலைமார்க்கமாக விழா நடைபெறும் நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார், இந்நிலையில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.
05:41 PM (IST) Jul 28
தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும் சென்னை விமானநிலையத்தில் பிரதமர் மோடி டி.ஆர்.பாலு, தயாதிமாறன் உள்ளிட்ட எம்.பிக்களும் வரவேற்றனர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் வானதி சீனிவாசனும் பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றார்.
05:37 PM (IST) Jul 28
நேரு விளையாட்டரங்கில் இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் கலைஞர்கள் அரங்கேற்றினர். தமிழநாட்டில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது.
05:33 PM (IST) Jul 28
ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் காயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்த்துக்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் கதக், மணிப்பூரின் மணிப்பூரி, அசாமின் சத்ரியா, ஆந்திராவின் குச்சிப்பிடி, தமிழ்நாடு பரதநாட்டியம்,ஓடிசாவில் ஓடிசி , கேராளவின் மோகனி ஆட்ட ஆகிய நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது.
05:28 PM (IST) Jul 28
ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் காயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்த்துக்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்தியாவின் 8 பாரம்பரிய நடனங்கள் அரங்கேற்றப்படுகிறது.
05:23 PM (IST) Jul 28
”வந்தே மாதரம்” பாடல் ஒலிக்க 186 நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அப்போது அரங்கத்தின் மையப்பகுதியில் லேசர் ஒளியில் பன்னாட்டு கொடிகள் ஒளிர்ந்தன. இசை முழுக்கத்திற்கு இடையே நாடுகளின் அணி வகுப்பு நடைபெற்றது.
05:16 PM (IST) Jul 28
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதில் வீரர்களை அரசுப் பள்ளி மாணவர்கள் வழி நடத்தி செல்கின்றனர். மொத்தம் 186 மாணவர்கள் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளனர். தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச் செல்லும் வீரர்களை அரசுப் பள்ளி மாணவர்கள் வழிநடத்தி செல்கின்றனர்
05:12 PM (IST) Jul 28
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அகமதாபாத்திலிருந்து 3.10 மணிக்கு புறப்பட்ட பிரதமர் மோடி 5.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் வந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டரங்கத்திற்கு வரவிருக்கிறார். பிரதமர் மோடியை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் தொண்டர்களும் கூடியுள்ளனர். மேலும் பாரம்பரிய நடன ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
05:08 PM (IST) Jul 28
சதுரங்க போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் கொடி அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. மேலும் விழாவில் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கண்னை கவரும் மணல் ஓவியங்களை வரைந்து ஓவியர் சர்வ படேல் சாகசம் புரிந்தார். நேரு விளையாட்டு அரங்களில் தொடக்க விழா நடைபெறும் மைய பகுதி அருகே டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.
05:04 PM (IST) Jul 28
செஸ் ஒலிம்பியாட்டிற்காக உருவாக்கப்பட்ட வரவேற்பு பாடல் காட்சிப்படுத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுயுள்ளார். விவிஐபிக்கள், பார்வையாளர்கள் அமர சிறப்பு கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் நடிகர் ரஜினிகாந்த, கவிஞர் வைரமுத்து, நடிகர் கார்த்தி ஆகியோர் பங்கேற்றுயுள்ளனர். மேலும் பாரம்பரிய இசைக்கருவிகள் முழுங்க வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
04:59 PM (IST) Jul 28
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார். அகமதாப்பாத்திலிருந்து 3.10 மணிக்கு பிரதமர் மோடி புறப்பட்ட நிலையில் மாலை 5.10 மணிக்கு சென்னைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் பிரம்மாணட தொடக்க விழா நடைபெறவுள்ள நேரு விளையாட்டு அரங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கிறது. அங்கு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன. நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், துர்கா ஸ்டாலின் அமர்ந்து இருக்கின்றனர்
04:56 PM (IST) Jul 28
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதல்வர் முக ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, மருகர் கார்த்தி ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். நிகழ்ச்சிகளை பாவனா தொகுத்து வழங்குகிறார்.
04:34 PM (IST) Jul 28
மிகவும் நிம்மதியாகவும், தைரியமானவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததோடு அதனை மிக வசதியாக இருப்பதாக கூறிய பாலிவுட் நடிகைகள் குறித்து பார்க்கலாம்...
மேலும் படிக்க...ஐஸ்வர்யா ராய் முதல் ரேகா வரை...நெருங்கமான காட்சிகளில் வசதியாக உணர்ந்த நடிகைகள்
03:54 PM (IST) Jul 28
ராஷ்மிகா அணிந்திருந்த சிவப்பு நிற லெஹங்காவில் இலைகள், சீக்வென்ஸ், மணிகள், கிறிஸ்டல்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டிருந்தன. அவை தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உத்வேகத்தை எடுத்து காட்டின.
மேலும் படிக்க...அட்டை படத்திற்காக தாறுமாறு போஸ் கொடுத்த வாரிசு பட நாயகி ராஷ்மிகா
03:22 PM (IST) Jul 28
Dhanush birthday : தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகிறது. அந்த வீடியோவில் தனுஷ் பியானோ இசைக்கருவியை அழகாக மீட்டுகிறார்.
மேலும் படிக்க...Dhanush birthday : இசையமைப்பாளராக மாறிய தனுஷ்..வைரலாகும் வீடியோ இதோ..
02:42 PM (IST) Jul 28
பிரபல இயக்குனரும், நடிகருமான ஜி.எம்.குமார் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் வெளியாகி திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க...
02:28 PM (IST) Jul 28
அவ்வப்போது பிகினி, கிளாமர் உடை உள்ளிட்டவற்றில் ரசிகர்களுக்கு காட்சியளிக்கும் ராய் லட்சுமி தற்போது பச்சை நிற லோ நெக் உடை அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார்.
மேலும் படிக்க...ஹாட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி... கண் கவரும் முழு உடையில் கவர்ச்சி போட்டோ சூட்
02:16 PM (IST) Jul 28
தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு வழங்கிய லீடர் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் காட்டி அமைச்சர் தா.மோ. அன்பரசன் வாழ்த்து பெற்றார்.மேலும் படிக்க
02:15 PM (IST) Jul 28
நாளை காலை 10 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் 42 வது பட்டமளிப்பு அண்ணாபல்கலைக் கழக விவேகானந்தா அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை கொடுக்கவிருக்கிறார். மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொள்கின்றனர்.
02:08 PM (IST) Jul 28
நீங்கள் மோடி என்றும், நீங்கள் ராஜ்யசபாவில் வேலை செய்கிறீர்கள் என்றும் பிரதமரிடம் 5 வயது சிறுமி கூறியிருப்பது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி அந்த சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து பாராட்டியுள்ளார்.மேலும் படிக்க
01:47 PM (IST) Jul 28
நடிகர் துல்கர் சல்மான் ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள சீதாராமம் படம் விரைவில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரொமோஷனில் பிசியாக இருக்கிறார் இவர். தற்போது தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் மலையாள நடிகர் துல்கர் ஆடம்பரக்கார் பிரியர் என சொல்லப்படுகிறது. அவரிடம் உள்ள கார்கள் குறித்தான லிஸ்ட் சமீபத்தில் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் தந்தை மலையாள சூப்பர் ஹீரோ மம்முட்டி ஆவார்.
மேலும் படிக்க...dulquer salmaan birthday : ஆடம்பர கார் பிரியர் துல்கர் சல்மான்.. எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா?
01:36 PM (IST) Jul 28
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக் கட்சி தலைவர்கள் வரவேற்கின்றனர். ஐ.என்.எஸ் அடையாறில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன்வரவேற்கின்றனர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்திற்கு சென்று பிரதமரை நாளை வழியனுப்பி வைக்கிறார்
01:10 PM (IST) Jul 28
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தனது வாழ்த்து பதிவில் நான் மிகவும் விரும்பும் உள்ளரங்க விளையாட்டு அனைத்து செஸ் வீரர்களும் மிகவும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என போட்டியாளர்களுக்கு தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க....சதுரங்கம் விளையாடும் ரஜினி..ஒலிம்பியாட் போட்டியாளர்களுக்கு வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்.