இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதைப் பற்றி எனக்கு கவலை இல்லையென தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்மானம் இனம் மானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம் தான் திமுக அரசை விமர்சிப்பதாகவம் குற்றம்சாட்டினார்.

10:13 PM (IST) Aug 24
தமிழ்நாட்டில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்துள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியது.
09:53 PM (IST) Aug 24
1993 ஆம் ஆண்டு அவர் வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையில்தான் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
08:58 PM (IST) Aug 24
பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பா.ஜ.க உட்பட பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 55,000 பேர் திமுகவில் இணைந்தனர்.
08:15 PM (IST) Aug 24
முதல்வர் மு.க ஸ்டாலின் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
07:04 PM (IST) Aug 24
விருதுநகர், அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
06:45 PM (IST) Aug 24
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
05:27 PM (IST) Aug 24
பள்ளி தரப்பில் தற்கொலை செய்து கொண்டதாகவும், உறவுகள்- பெற்றோர்கள் தரப்பில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி, 4 நாட்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
05:23 PM (IST) Aug 24
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வந்த 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக பூஜை போடப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும்...
05:18 PM (IST) Aug 24
நடிகை ஆண்ரியாவின் தங்கைக்கு தற்போது நடந்துள்ள நிலையில்... திருமண புகைப்படங்களை பகிர்ந்து, தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும்...
05:06 PM (IST) Aug 24
மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
04:24 PM (IST) Aug 24
ஈரோடு மாநகராட்சி நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையில் ஏசி திடீரென வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
04:00 PM (IST) Aug 24
பஞ்சாப் நேஷனல் வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
03:08 PM (IST) Aug 24
செக் மோசடி வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்திய லிங்குசாமி சிறை தண்டனையில் இருந்து தப்பித்தார். மேலும் படிக்க
02:56 PM (IST) Aug 24
குடும்ப தகராறில் 2 குழந்தைகளை அடித்து கொன்று, தானும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்ட தாயினால் பரபரப்பு ஏற்பட்டது.
02:43 PM (IST) Aug 24
பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து குஷ்பு பதிவிட்டுள்ளதாவது : “பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டு, வாழ்நாள் முழுவதும் பயத்துடனே வாழும் பெண்ணுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும். அத்தகைய வெறிச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் விடுதலை செய்யப்படக்கூடாது. அப்படி விடுவிக்கப்பட்டால் அது மனித குலத்திற்கும், பெண்களுக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அவமானம் ஆகும். பில்கிஸ் பானு மட்டுமில்லை எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும் அரசியலுக்கு அப்பார்பட்டு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க
02:04 PM (IST) Aug 24
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு பொதுமக்களை அழைத்து வர வாகனங்களை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
02:00 PM (IST) Aug 24
விக்ரம் வேதா படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். இதில் மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சையிப் அலி கானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும் நடித்துள்ளனர். இப்படத்தையும் புஷ்கர் காயத்ரி தான் இயக்கி உள்ளனர். இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் எடுத்துள்ள படக்குழு நேற்று அதன் டீசரை வெளியிட்டது. மேலும் படிக்க
01:01 PM (IST) Aug 24
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை காரில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து நகையை கொள்ளை அடித்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12:30 PM (IST) Aug 24
பேருந்தில் பயணம் செய்த போது குளிர்பானம் வாங்கி குடித்த சென்னையை சேர்ந்த பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12:20 PM (IST) Aug 24
இலவசங்கள் தொடர்பான வழக்கு குறித்து விவாதிக்க ஒரு குழு அமைக்கலாம் அல்லது அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கலாம். பொருளாதாரத்தை அழிக்கக் கூடிய இலவசங்கள் குறித்து விவாதிக்க வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. இது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
12:17 PM (IST) Aug 24
பாரதிராஜா மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன். நலிந்த நிலையிலும் நகைச்சுவை தீரவில்லை. சின்னச் சின்னப் பின்னடைவுகளைச் சீர்செய்ய சுத்த மருத்துவர்கள் சூழ நிற்கிறார்கள். அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார் கலையுலகை ஆண்டு வருவார் என வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
11:53 AM (IST) Aug 24
திமுக ஆட்சி மீது மக்கள் எந்த அளவு மதிப்பும் மரியாதை வைத்துள்ளார்கள் என்பதற்கு இந்த கோவை மாநாடு சாட்சி என கூறினார். எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் முகங்களில் பார்க்கக்கூடிய மகிழ்ச்சி மூலமாக அறிந்து கொள்ள முடிகிறதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
11:33 AM (IST) Aug 24
பீகார் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய குமார் சின்ஹாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
11:33 AM (IST) Aug 24
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) தரவரிசைப் பட்டியலை 2022, ஆகஸ்டு 25 ஆம் தேதி, சென்னை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (டிடிஇ) வெளியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
11:29 AM (IST) Aug 24
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் பள்ளி தாயாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாளை மறுதினம் காரணத்தை கூறாவிட்டால் விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என நீதிபதி கூறியுள்ளார்.
11:23 AM (IST) Aug 24
விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சி தொடங்க இன்னும் 40 நாட்களே உள்ளதால் தற்போது அதில் கலந்துகொள்ள உள்ள போட்டியாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
10:33 AM (IST) Aug 24
அவதார் படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் இருக்கும் என கூறப்படுகிறது. இதன்காரணமாக அவதார் படத்தை தற்போது ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தை 4K தரத்தில் 3D தொழில்நுட்பத்துடன் ரீ மாஸ்டர் செய்து வருகிற செப்டம்பர் 23-ந் தேதி உலகமெங்கும் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க
10:28 AM (IST) Aug 24
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பெண்கள் பெட்டியில் ஏற முயன்றவர்களை தடுத்த ரயில்வே பெண் காவலருக்கு கத்தி குத்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10:14 AM (IST) Aug 24
ஓராண்டிற்கும் மேற்பட்ட தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஒவ்வொரு வீட்டு பட்ஜெட்டிலும் மாதம் 5,000 ரூபாய்க்கு மேல் கூடுதல் செலவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், செலவுக்கேற்ப வருமானம் கூடவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
09:59 AM (IST) Aug 24
காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் எதிர் வரும் நாட்களில் தயார் நிலையில் இருக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சுற்றிக்கை அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
09:40 AM (IST) Aug 24
ஆலியா பட்டின் திமிர் பேச்சால் பிரம்மாஸ்திரா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வருவதால் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்துக்கு ஏற்பட்ட நிலைமை இந்த படத்துக்கும் ஏற்பட்டுவிடுமோ என படக்குழு கலக்கம் அடைந்துள்ளனர்.மேலும் படிக்க
09:36 AM (IST) Aug 24
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
08:51 AM (IST) Aug 24
234 தொகுதிகளில் 10 கோரிக்கை என்று முதலமைச்சர் நிர்ணயம் செய்திருப்பது ஒரு ஆண்டிற்காக அல்லது ஐந்தாண்டு ஆண்டிற்கானதா என கேள்வி எழுப்பியுள்ள ஆர்.பி.உதயகுமார், மக்களின் கோரிக்கைக்கு உச்சவரம்பு கிடையாது எனவும் கூறியுள்ளார்.
08:40 AM (IST) Aug 24
முதல்வர் மு.க.ஸ்டாலினை வரும் சனிக்கிழமை ஸ்ரீமதியின் தாய் செல்வி சந்திக்கிறார். மகளின் மரணத்துக்கு நீதி கோரி நடைபயணம் அறிவித்திருந்த நிலையில், நடைபயணம் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது.
08:38 AM (IST) Aug 24
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு மீது சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட பீகார் சட்டப்பேரவையில் நிதிஷ்குமாருக்கு 164 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது.
08:09 AM (IST) Aug 24
இந்தியன் 2 படம் தற்போது மீண்டும் உயிர்பெற்று உள்ளது. இதற்கு காரணம், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் தான். அவர் தற்போது இப்படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். லைகா நிறுவனத்துடன் சேர்ந்து உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க
07:47 AM (IST) Aug 24
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சோனியா காந்தியுடன் ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
07:47 AM (IST) Aug 24
அமிதாப் பச்சன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “எனக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா பாசிடிவ் என வந்துள்ளது. என் அருகில் இருந்தவர்களும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் தயவு செய்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.மேலும் படிக்க
07:42 AM (IST) Aug 24
Horoscope Today- Indriya Rasipalan August 24 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய ( 24/ 08/ 2022) 12 ராசிகளில் உங்களுக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
மேலும் படிக்க
07:41 AM (IST) Aug 24
சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு பள்ளியில் ஆய்வுக்கு சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்கள் தாமதமாக பள்ளிக்கு வந்தால் அவர்களை உள்ளே காத்திருக்க செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.