தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 532 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்று 542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 532 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனைகளில் 3.626 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

03:19 PM (IST) Apr 20
விடுதலை படத்தில் வெற்றிமாறன் உடன் பணியாற்றிய சூரி தற்போது துரை செந்தில்குமார் இயக்கும் படத்துக்காக அவருடன் மீண்டும் இணைய உள்ளாராம். மேலும் படிக்க
02:03 PM (IST) Apr 20
ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளனர். மேலும் படிக்க
01:32 PM (IST) Apr 20
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டில் தனிமைப்படுதிக்கொண்டுள்ளார்.
01:24 PM (IST) Apr 20
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்காக கேரளா சென்றுள்ள திரிஷா, கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி ஆகியோர் அங்கு எடுத்த செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். மேலும் படிக்க
12:41 PM (IST) Apr 20
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ராம்சரண் ஆயிரம் ஸ்டண்ட்மேன்களுடன் சண்டையிட உள்ளாராம். மேலும் படிக்க
12:39 PM (IST) Apr 20
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஏற்கனவே புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கோலார், காந்தி நகர் இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
10:49 AM (IST) Apr 20
கலைஞர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் குறித்து ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற உள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக்கொள்கிறேன் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
10:46 AM (IST) Apr 20
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
10:05 AM (IST) Apr 20
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட முன்வரைவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் படிக்க
09:57 AM (IST) Apr 20
தாம்பரத்தில் 2023-24 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு வரித்தொகையில் 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது.
08:44 AM (IST) Apr 20
சாதிகளே இல்லை என்று சொல்கிற மதங்களில், ஓட்டுக்காக சாதிய இட ஒதுக்கீடு கேட்டு மக்களை தூண்டிவிடும் திமுக அரசின் மதவாத போக்கை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
08:43 AM (IST) Apr 20
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் இபிஎஸ் நேற்று வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஓபிஎஸ் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
08:29 AM (IST) Apr 20
லியோ படத்திற்கு பின் நடிகர் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
07:46 AM (IST) Apr 20
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது. இறுதி விசாரணை இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
07:35 AM (IST) Apr 20
சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலைக்கு திமுக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் நானும் வழக்கு தொடர்வேன் என கனிமொழி கூறியுள்ளார்.
07:29 AM (IST) Apr 20
அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனைக்கு எதிராக ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் சூரத் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
07:13 AM (IST) Apr 20
தமிழகத்தில் முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மருத்துவப் படி அதிகரிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.