அண்ணாமலையை ரவுண்ட் கட்டும் திமுக.. உதயநிதியை தொடர்ந்து கனிமொழி எடுத்த அதிரடி முடிவு..!
சொத்து பட்டியல் வெளியீடு தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
சொத்துப் பட்டியல் தொடர்பாக அண்ணாமலைக்கு திமுக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் நானும் வழக்கு தொடர்வேன் என கனிமொழி கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ம் தேதி திமுக தலைவர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார். இதில், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், கனிமொழி, எ.வ.வேலு உள்ளிட்ட 17 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர். மேலும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ரூ.200 கோடி லஞ்சம் பெற்றதாக அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.
இதையும் படிங்க;- 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்... அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ்!!
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக சார்பில் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக 500 கோடி ரூபாய் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். மேலும், புகாரில் தெரிவித்தது போல் நோபல் ஸ்டீல் நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. சொத்து பட்டியல் வெளியீடு தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும். நோட்டீஸ் கிடைத்த 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக எம்.பி. கனிமொழி;- திமுகவினருக்கு எதிராக சொத்துப் பட்டியல் குறித்து தகவல் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நிச்சயமாக நானும் வழக்கு தொடர்வேன். அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும் என்றார்.
இதையும் படிங்க;- அவதூறு பரப்பும் அண்ணாமலையை சும்மா விடமாட்டோம்.. களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்..!
ஏற்கனவே உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.