தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

05:29 PM (IST) Apr 07
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், முதல்வர் மு.க ஸ்டாலினுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் தற்போது உச்சத்துக்கு சென்றுள்ளது.
04:56 PM (IST) Apr 07
திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர்மட்ட அதிகாரியாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர் அமுதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
04:06 PM (IST) Apr 07
பாஜக தொண்டரின் குழந்தை ஒருவருக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
02:48 PM (IST) Apr 07
கிறிஸ்தவ சமூகத்தில் புனித வெள்ளிக்கு முக்கிய இடம் உண்டு. இது ஈஸ்டர் ஞாயிறுக்கு முன் புனித வியாழனுக்கு பிறகு கொண்டாடப்படுகிறது.
01:50 PM (IST) Apr 07
பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அக்ஷதா மூர்த்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அருகில் அமர வைக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
12:02 PM (IST) Apr 07
தமிழகத்தில் ஏப்ரல் 10 முதல் 28ம் தேதிக்குள் 4-9ம் வகுப்பு மாணவர்களுக்கும், ஏப்ரல் 17 முதல் 21ம் தேதிக்குள் 1முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வை முடிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
12:01 PM (IST) Apr 07
நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
11:18 AM (IST) Apr 07
புதுச்சேரியில் கொரோனா பரவல் கிடுகிடுவென அதிகரித்து வருவதை அடுத்து பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
11:17 AM (IST) Apr 07
கோவை அருகே அதிகாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
10:48 AM (IST) Apr 07
கேரள மாநிலத்தில் காட்டு யானைகள் அடிக்கடி எஸ்டேட் பகுதிக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையான ஒன்றாகும்.
10:16 AM (IST) Apr 07
ஆளுநரின் பேச்சு அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமானது என சட்டவல்லுநர்கள் கருதுவதை மனதில்கொண்டு, இனிவரும் காலங்களில் ஆளுநர் இதுமாதிரியான வார்த்தைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் படிக்க..
09:55 AM (IST) Apr 07
நாடு முழுக்க பல்வேறு ரயில் தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வேகமாகவும் செல்வதால் மக்களிடையே பெரும் வரவேற்பை இது பெற்றுள்ளது.
09:09 AM (IST) Apr 07
ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் ஆளுநர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார் என வைகோ கூறியுள்ளார்.
09:09 AM (IST) Apr 07
அஜித் படத்தை இயக்கப்போகிறோம் என மிகுந்த ஆவலோடு இருந்த விக்னேஷ் சிவனுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கும் விதமாக கடந்த ஜனவரி மாத இறுதியில் அவரை அப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி விட்டனர். அவர் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. ஆனால் அதுபற்றி எந்தவித கருத்தும் மவுனம் காத்து வந்த விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டியில் முதன்முறையாக அதுகுறித்து மனம்திறந்து பேசி உள்ளார். மேலும் படிக்க
08:46 AM (IST) Apr 07
ஆளுநர் ஆர்என் ரவி சட்டமன்றம் தொடர்பாகவும், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து அவர் வகிக்கும் பதவிக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் அவர் செய்யும் துரோகம் என காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
07:48 AM (IST) Apr 07
அதிமுகவின் புதிய விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை அங்கீகரிக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதேபோன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தாமதிக்காமல் அங்கீகரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.
07:29 AM (IST) Apr 07
இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது என டிடிவி.தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.