தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்.

07:15 PM (IST) Feb 23
பேட்டிங்கில் அதிரடி காட்டிய பாகிஸ்தான்?
07:03 PM (IST) Feb 23
Virat Kohli's Stats vs Pakistan in ICC Champions Trophy : பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 4 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 124 ரன்கள் எடுத்துள்ளார்.
04:30 PM (IST) Feb 23
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 25 ஓவர்கள் முடிவில் 99 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. முகமது ரிஸ்வான் (24), சவுத் ஷகீல்(29) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
04:26 PM (IST) Feb 23
04:25 PM (IST) Feb 23
04:12 PM (IST) Feb 23
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
03:41 PM (IST) Feb 23
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாயில் விளையாடும் நிலையில், ஜஸ்பிரித் பும்ரா துபாய் சென்று இந்திய வீரர்களை சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க https://tamil.asianetnews.com/gallery/sports/champions-trophy-jaspurt-bumrah-visits-dubai-to-meet-indian-players-ray-ss4rxh
03:31 PM (IST) Feb 23
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 53/2 என தடுமாறி வருகிறது. ஸ்டார் வீரர் பாபர் அசாம் (23) ஹர்திக் பாண்ட்யா பந்தில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனார். இமாம் உல் ஹக் (5) அக்சர் படேலின் சூப்பர் த்ரோவில் ரன் அவுட் ஆனார்.
01:33 PM (IST) Feb 23
திமுக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் அரசு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது.
12:10 PM (IST) Feb 23
புதிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால் 5000 கோடி நிதி இழப்பு ஏற்படும் என மத்திய அமைச்சர் கூறிய கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளில் திமுகவினர் எத்தனை பேர் படிக்கிறார்கள் என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
11:49 AM (IST) Feb 23
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திட்டம் நாளை தொடங்குகிறது. ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 25% தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்படும்.
09:28 AM (IST) Feb 23
மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னை, பெங்களூரிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கோயம்புத்தூர், திருநெல்வேலி உட்பட பல ஊர்களுக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது.
09:27 AM (IST) Feb 23
2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு திமுக காய் நகர்த்துகிறது. மாவட்ட செயலாளர்கள் மாற்றம், புதிய நியமனங்கள் என வியூகங்களை வகுத்து வருகிறது.
08:47 AM (IST) Feb 23
Ajith Involved in a Car Accident in Valencia : ஸ்பெயின் நாட்டில் வாலன்சியாவில் நடைபெற்று வரும் கார் ரேஸில் 6ஆவது சுற்றின் போது அஜித் குமார் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகிறது.
07:47 AM (IST) Feb 23
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தினந்தோறும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
07:12 AM (IST) Feb 23
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பிளவு நீடிக்கிறது. தேனியில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்த, ஓபிஎஸ் அணியும் போட்டி கூட்டம் அறிவித்துள்ளது.
06:45 AM (IST) Feb 23
டொனால்ட் டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த புடின் மற்றும் ஜெலென்ஸ்கி இணைய அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் நிதி உதவி மற்றும் ஐரோப்பாவின் பங்களிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
06:45 AM (IST) Feb 23
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 352 ரன்களை சேஸ் செய்த ஆஸி. அணியின் ஜோஸ் இங்கிலிஸ் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.