Published : Mar 04, 2025, 07:08 AM ISTUpdated : May 16, 2025, 02:40 PM IST

Tamil News Live today 04 March 2025: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

சுருக்கம்

IND vs AUS, ICC Champions Trophy 2025 : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் அரையிறுதியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் விளையாடிய ஆஸி, 264 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 267 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டி உள்பட இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 8 முறை மோதியுள்ளன. இதில் 5 போட்டிகளில் இந்திய அணியும், 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும் வென்றுள்ளது. 

Tamil News Live today 04 March 2025: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

11:50 PM (IST) Mar 04

அஜித், கமல் வழியில் நயன்தாரா; லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம்: நயன்தாரா வேண்டுகோள்!

11:06 PM (IST) Mar 04

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

10:21 PM (IST) Mar 04

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

கோயம்புத்தூர் கோனியம்மன் கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மட்டும் நடைபெறும். விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளிகளின் விவரம் இங்கே.

மேலும் படிக்க

10:15 PM (IST) Mar 04

IND vs AUS : உலகக் கோப்பை தோல்விக்கு பதிலடி – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா!

09:37 PM (IST) Mar 04

இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

09:29 PM (IST) Mar 04

IND vs AUS : வெற்றிப் பாதையில் இந்தியா – அடுத்தடுத்து 2 சிக்ஸர் விளாசிய பாண்டியா!

09:22 PM (IST) Mar 04

அமிர்தத்துடன் கடலிலிருந்து வெளிவந்த லட்சுமி தேவி!

09:10 PM (IST) Mar 04

Champions Trophy 2025 : 6ஆவது முறையாக ஜாம்பாவிடம் ஆட்டமிழந்த கோலி – சதத்தை கோட்டைவிட்ட கிங்!

IND vs AUS : 

08:58 PM (IST) Mar 04

IND vs AUS : இந்தியா 200 ரன்கள் குவிப்பு – வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

08:52 PM (IST) Mar 04

ஆஸி வீரர் ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு – பீல்டராக விராட் கோலி படைத்த சாதனையின் சுவாரஸ்யம்!

08:46 PM (IST) Mar 04

ஹிந்தி திணிப்பு! திமுகவின் இரட்டை வேடம்! அரசியல் கோஷம்! இறங்கி அடிக்கும் எச்.ராஜா!

 மத்தியில் ஆட்சியில் இருந்தபோது பிற மாநிலங்களில் தமிழ் பிரச்சார சபை நிறுவ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க

08:38 PM (IST) Mar 04

IND vs AUS : 4ஆவது விக்கெட்டை இழந்த இந்தியா – அக்‌ஷர் படேல் 27 ரன்னுக்கு அவுட்!

  • தற்போது வரையில் இந்தியா 35 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது.
  • இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற 90 பந்துகளில் 87 ரன்கள் தேவை.
  • விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் விளையாடி வருகின்றனர்.
  • இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்த வரையில் ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் இருக்கின்றனர்.

08:33 PM (IST) Mar 04

எடை இழப்புக்கு உதவும் பிளாக் காபி: எப்படி குடிக்க வேண்டும்?

கருப்பு காபி எடை இழப்புக்கு உதவும் ஒரு சக்திவாய்ந்த பானமாகும். உடற்பயிற்சிக்கு முன் குடிப்பது, காலையில் குடிப்பது, சர்க்கரை பானங்களுக்கு மாற்றாக குடிப்பது மற்றும் ஆரோக்கியமான பொருட்களைச் சேர்ப்பது எடை இழப்புக்கு உதவும்.

மேலும் படிக்க

08:16 PM (IST) Mar 04

Siraj : முகமது சிராஜ், நாகினி 3 நடிகை மஹிரா ஷர்மா உடன் டேட்டிங்கா? உண்மையை சொன்ன நடிகை!

08:11 PM (IST) Mar 04

IND vs AUS : அரைசதத்தை கோட்டை விட்ட ஷ்ரேயாஸ் ஐயர் – 3ஆவது விக்கெட்டை இழந்த இந்தியா!

  • இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
  • ஷ்ரேயாஸ் ஐயர் 3 பவுண்டரிகள் உள்பட 45 ரன்கள் எடுத்து ஆடம் ஜம்பா பந்தில் ஆட்டமிழந்தார்.
  • இந்தியா 26.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
  • இந்தியா வெற்றி பெற 140 பந்துகளில் 131 ரன்கள் தேவை.
  • ஆஸிக்கு எதிராக முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
  • கடந்த 2023 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸிக்கு எதிராக இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து டிராபியை கோட்டைவிட்டது.
  • அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

08:04 PM (IST) Mar 04

IND vs AUS : சேஸ் மாஸ்டர் : அரைசதம் அடித்த விராட் கோலி!

07:59 PM (IST) Mar 04

Rashmika Vs Deepika Padukone: பாலிவுட்டில் தீபிகா படுகோன் சாதனையை 3 படங்களில் முறியடித்த ராஷ்மிகா!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை, ராஷ்மிகா மந்தனா தன்னுடைய அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் முந்தி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம்.
 

மேலும் படிக்க

07:50 PM (IST) Mar 04

IND vs AUS : விராட் கோலி – ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணி : 100 ரன்களை கடந்த இந்தியா!

07:40 PM (IST) Mar 04

'இந்த' பொருள்களை திறந்து வைப்பவரா நீங்க? தீரா வறுமைக்கு இதான் காரணம்!! 

Vastu Tips : இந்த பொருட்களை திறந்து வைத்தால் வறுமையும், துயரமும் உங்கள் வீட்டில் குடிகொள்ளும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது.

மேலும் படிக்க

07:27 PM (IST) Mar 04

பிரியங்கா சோப்ராவின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிறகே ஷூட்டிங் தொடங்கிய இயக்குநர்!

Interesting Facts About Priyanka Chopra Jai Gangaajal : பிரியங்கா சோப்ராவின் 'ஜெய் கங்காஜல்' திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் நிறைவு. திரைப்படத்தின் படப்பிடிப்பு, பிரகாஷ் ஜா மற்றும் பிரியங்கா இடையேயான நிகழ்வுகள் மற்றும் பாக்ஸ் ஆபிஸில் படத்தின் செயல்பாடு பற்றிய முழு விவரங்கள்.

மேலும் படிக்க

07:19 PM (IST) Mar 04

IND vs AUS: ஸ்பின்னர்களை வைத்து ஆஸீயை காலி செய்த ரோகித் சர்மா – 264 ரன்களுக்கு சுருண்ட ஆஸி!

07:07 PM (IST) Mar 04

IND vs AUS : 2ஆவது விக்கெட்டை இழந்த இந்தியா – ரோகித் சர்மா அவுட்!

 

06:58 PM (IST) Mar 04

IND vs AUS : முதல் விக்கெட்டை இழந்த இந்தியா – சுப்மன் கில் அவுட்!

  • இந்தப் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு 2 முறை கேட்ச் விடப்பட்டது,
  • சுப்மன் கில் 8 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
  • வழக்கமாக CEAT பேட் கொண்டு விளையாடும் சுப்மன் கில் இன்றைய போட்டியில் MRF பேட் கொண்டு விளையாடினார்.
  • இந்திய அணி வெற்றி பெற 44 ஓவர்களில் 226 ரன்கள் தேவை.

06:55 PM (IST) Mar 04

1xBet விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென்!

கிரிக்கெட் வீரர் ஹென்ரிச் கிளாசென் 1xBet நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியன் லீக் கார்னிவல் போட்டியை அவர் பிரதிநிதித்துவப்படுத்துவார்.

மேலும் படிக்க

06:42 PM (IST) Mar 04

இஸ்ரோவில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ISRO ஸ்ரீஹரிகோட்டாவில் கட்டுப்பாட்டாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள்.

மேலும் படிக்க

06:39 PM (IST) Mar 04

IND vs AUS : ரோகித் சர்மாவிற்கு கேட்சை விட்ட கோனோலி

06:39 PM (IST) Mar 04

Sai Pallavi Makeup Secret: சாய் பல்லவி அடிக்கடி பயன்படுத்தும் இரண்டே மேக்கப் பொருட்கள் பற்றி தெரியுமா?

நடிகை சாய் பல்லவி தன்னுடைய திரைப்படங்களில் கூட அதிக மேக்கப் பயன்படுத்துவது இல்லை. அப்படி பட்ட இவருடைய பையில் இருக்கும் 2 மேக்கப் பொருட்கள் பற்றி தெரியுமா?
 

மேலும் படிக்க

06:22 PM (IST) Mar 04

IND vs AUS : ஆஸிதிரேலியா 264 ரன்னுக்கு ஆல் அவுட்!

  • முகமது ஷமி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 10 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்தார்.
  • வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
  • ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தார். 8 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் உள்பட 40 ரன்கள் கொடுத்தார்.
  • அக்‌ஷர் படேல் ஒரு விக்கெட் எடுத்தார். 8 ஓவர்கள் பந்து வீசிய அவர் ஒரு மெய்டன் உள்பட 43 ரன்கள் கொடுத்தார்.
  • ஹர்திக் பாண்டியா 5.3 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் எடுத்தார். 40 ரன்கள் கொடுத்தார்.

  • வருண் சக்கரவர்த்தி – டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுத்தார்.
  • ரவீந்திர ஜடேஜா – மார்னஷ் லபுஷேன் விக்கெட்டை எடுத்தார்.
  • முகமது ஷமி – ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை கைப்பற்றினார்.
  • அக்‌ஷர் படேல் – கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை கைப்பற்றினார்.

 

  • அலெக்ஸ் கேரியின் ரன் அவுட்  தான் இன்றைய போட்டியில் முக்கியமாக திருப்பு முனையை ஏற்படுத்தியது. ஷ்ரேயாஸ் ஐயர் தான் அவரை ரன் அவுட் செய்தார்.

06:14 PM (IST) Mar 04

களத்தில் இறங்கிய சீமான்! தென்காசிக்கு வேட்பாளர் அறிவிப்பு! யார் இந்த கௌஷிக் பாண்டியன்?

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள். தென்காசி தொகுதி வேட்பாளராக கௌஷிக் பாண்டியனை சீமான் அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

06:00 PM (IST) Mar 04

IND vs AUS : 9ஆவது விக்கெட்டையும் இழந்த ஆஸி – 262/9

05:53 PM (IST) Mar 04

IND vs AUS : 8ஆவது விக்கெட்டை இழந்த ஆஸி – அலெக்ஸ் கேரி ரன் அவுட்!

  • அலெக்ஸ் கேரி 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 61 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
  • ஆஸி 48 ஓவர்கள் முடிவில் 252/8
  • கடைசி 2 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்தால் கூட 262 ரன்கள் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

05:45 PM (IST) Mar 04

IND vs AUS: சிறப்பாக பந்து வீசிய வருண் சக்கரவர்த்தி – 2 விக்கெட்டுகளுடன் நிறைவு!

  • நியூசிக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
  • ஆஸி 46 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டிற்கு 242 ரன்கள் எடுத்தது.
  • அலெக்ஸ் கேரி 59 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
  • ஹர்திக் பாண்டியா அதிக ரன்கள் கொடுத்த Most Expensive Playerஆக இன்றைய போட்டியில் திகழ்கிறார். 4 ஓவருக்கு 34 ரன்கள் கொடுத்துள்ளார்

05:39 PM (IST) Mar 04

முகம் ஜொலிக்க செம்பருத்தி பூ.. ஒரே வாரத்தில் ரிசல்ட் தரும் பேஸ் பேக்!!

Hibiscus Flower for Glowing Skin : ஒரே வாரத்தில் உங்களது முகம் பளபளக்க செம்பருத்திப்பூவே முகத்திற்கு எப்படி போட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேலும் படிக்க

05:31 PM (IST) Mar 04

சிபிஎஸ்இ-யில் சேர்க்க என்ன வயது தகுதி? மாநில அரசு பள்ளி தகுதிகள் என்ன?

சமச்சீர் கல்வி மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளில் குழந்தைகளை எந்த வயதில் சேர்க்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

மேலும் படிக்க

05:27 PM (IST) Mar 04

IND vs AUS : ஆஸ்திரேலியா ஸ்கோர் கணிப்பு – 280 ரன்கள் எடுக்க வாய்ப்பு!

  • ஒருவேளை ஆஸ்திரேலியா விக்கெட்டை இழந்தால் 250 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகிவிடும். ஆஸிக்கு பக்க பலமாக இருப்பது அலெக்ஸ் கேரி. அவர் 50 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
  • இந்தியா வருண் சக்கரவர்த்தி, அக்‌ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகிய சுழல் ஜாம்பவான்களை வைத்தே அட்டாக் செய்திருக்கிறது.
  • இந்தியா 280 ரன்கள் வரையில் சேஸ் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், அதற்கும் மேலாக ஆஸி 300 ரன்களுக்கு மேல் எடுத்தால் சேஸ் செய்வது கடினம்.

05:13 PM (IST) Mar 04

Ajithkumar: டிரைவர்கள் சாப்பிட தன்னுடைய ரிசப்ஷனையே மாற்றி வைக்க சொன்ன அஜித்!

நடிகர் அஜித் குமாரின் திருமண ரிசப்ஷன் பற்றி பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். 
 

மேலும் படிக்க

05:10 PM (IST) Mar 04

IND vs AUS : இந்திய அணியின் டர்னிங் பாய்ண்ட் – கிளென் மேக்ஸ்வெல் அவுட்!

05:04 PM (IST) Mar 04

IND vs AUS : ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்த ஷமி!

04:53 PM (IST) Mar 04

தாய்ப்பால் கொடுக்குறப்ப 'இந்த' தவறை பண்ணாதீங்க!!  குழந்தைகளை இப்படி கவனிச்சுக்கங்க.. 

Newborn Baby Care Tips : நீங்கள் இளம் பெற்றோர் என்றால், புதிதாகப் பிறந்த பச்சிளங் குழந்தையை நன்றாக பராமரிக்க சில குறிப்புகள் இங்கே.

மேலும் படிக்க

04:50 PM (IST) Mar 04

IND vs AUS : அதிரடியை தொடங்கிய ஆஸ்திரேலியா – 300 ரன்களுக்கு மேல் சேஸ் செய்யுமா இந்தியா?

IND vs AUS, Champions Trophy 2025 :

  • அஸி, இதே நிலையில் தொடர்ந்து 330 ரன்கள் வரையில் எடுக்க வாய்ப்பிருக்கிறது.
  • இந்தியா 300 ரன்களுக்கு சேஸ் செய்வது மிகவும் கடினம்.
  • இதற்கு முன்னதாக இந்தியா விளையாடிய போட்டிகளில் 230 ரன்களை சேஸ் செய்வது கடினமாக இருந்தது. நியூசிக்கு எதிராக இந்தியா 249 ரன்கள் தான் அதிகமாக எடுத்திருக்கிறது.
  • அதன்படி, இந்தப் போட்டியில் ஆஸியை 250 ரன்களுக்குள் சுருட்டினால் இந்தியா வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.