Apr 5, 2025, 1:17 AM IST
Tamil News Live today 04 April 2025: 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே கேப்டனாகும் தோனி?
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா 12 மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற காரசார விவாதங்களுக்கு பிறகு நிறைவேறியது.128 பேர் அதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். அதிமுக சேர்ந்த 4 பேரும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
1:17 AM
2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சிஎஸ்கே கேப்டனாகும் தோனி?
MS Dhoni Captain For CSK in IPL 2025 : தோனி ரசிகர்களுக்கு குட் நியூஸ். 2 வருடங்களுக்கு பிறகு எம்.எஸ்.தோனி மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆகிறார். டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக தோனி மீண்டும் சென்னை அணிக்கு கேப்டனாக களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க11:32 PM
ஃபார்மில் இல்லாத ரோகித் சர்மாவுக்கு காயமா? சும்மா சொல்லி உட்கார வச்ச மும்பை இந்தியன்ஸ்?
Rohit Sharma Knee Injury : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரோகிஹித் சர்மா விளையாடவில்லை. டாஸ் போடும்போது ஹர்திக் பாண்டியா இதை உறுதி செய்தார்.
மேலும் படிக்க11:15 PM
Vivo T4 5G வருது பாருங்க! கசிந்த அட்டகாசமான டிசைன் மற்றும் சூப்பர் அம்சங்கள்!
இந்தியாவில் விரைவில் Vivo T4 5G அறிமுகமாகிறது! ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய பேட்டரி, வேகமான சார்ஜிங் மற்றும் ஃபேன்டம் கிரே, எமரால்டு பிளேஸ் நிறங்களில் ஸ்டைலான வடிவமைப்புடன் வருகிறது. எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 20,000 - ரூ. 25,000.
மேலும் படிக்க11:06 PM
வானமே எல்லை! தமிழக அரசின் சூப்பர் சான்ஸ் - இலவச ட்ரோன் பயிற்சி! உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழக அரசு சென்னையில் ஏப்ரல் 28-30, 2025 வரை 3 நாட்கள் இலவச ட்ரோன் பயிற்சி முகாம் நடத்துகிறது. ட்ரோன் செயல்பாடு, பராமரிப்பு மற்றும் விதிகள் பற்றி கற்றுக்கொள்ளுங்கள். குறைந்த இடங்களே உள்ளன, உடனே விண்ணப்பிக்கவும்!
மேலும் படிக்க11:03 PM
சனி செவ்வாய் சேர்க்கை; ஏப்ரல் 5 முதல் இந்த 5 ராசிக்கு வாழ்க்கையில் முன்னேற்றம்; கையில் காசு இருக்கும்!
Saturn Mars Conjunction Palan in Tamil :ஏப்ரல் 5, 2025 அன்று காலை, வேத ஜோதிடத்தின்படி செவ்வாய் மற்றும் சனி கிரகங்களின் சேர்க்கை நவகிரக யோகத்தை உருவாக்குகிறது.
மேலும் படிக்க10:53 PM
12-ஆம் வகுப்பு படித்திருந்தாலே போதும்! சென்ட் பேங்க் ஹோம் ஃபைனன்ஸில் வேலை! 212 காலி பணியிடங்கள்
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நற்செய்தி! சென்ட்ரல் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (CBHFL) இந்தியா முழுவதும் 212 பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்கிறது. தகுதி, சம்பளம் ஆகியவற்றை சரிபார்த்து ஏப்ரல் 25, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் படிக்க9:30 PM
நேபாளத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
Earthquake in Nepal : நேபாளத்தில் இன்று இரவு 7.52 மணிக்கு 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, அதாவது, வட இந்தியாவின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க8:40 PM
ஏப்ரல் 7ம் தேதி நடைபெற இருந்த ஆண்டுத்தேர்வு ஒத்திவைப்பு! அரசு நிர்வாகம் அறிவிப்பு
ஆழி தேரோட்டம் காரணமாக வருகின்ற 7ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த ஆண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க8:16 PM
வெப் சீரிஸ் தானே என்று எல்லை மீறி நடித்த டாப் 4 நடிகைகள் யார் யார் தெரியுமா?
Top 4 Bold Actress Who crossed their Limits in Web Series : வரம்புகளை மீறி துணிச்சலாக நடித்த டாப் 4 நடிகைகளும் அவர்கள் நடித்த வெப் சீரிஸ்களும் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க7:43 PM
பிஎஸ்என்எல் நோக்கி ஓடி வரும் வாடிக்கையாளர்கள்! 7 மாதங்களில் இத்தனை லட்சம் பேர் சேர்ப்பா?
கடந்த 7 மாதங்களில் பிஎஸ்என்எல் பக்கம் வாய்ந்த வாடிக்கையாளர்கள் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க6:34 PM
ஹைதராபாத்தில் 400 ஏக்கர் நிலத்தில் மரங்கள் வெட்டப்படுவதற்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு!
Kancha Gachibowli Forest Tree Cutting : தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலியில் உள்ள வனப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுவதை தாமாக முன்வந்து விசாரித்த உச்ச நீதிமன்றம், மரங்களை வெட்ட தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாவிட்டால் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க6:20 PM
மூலோபாய தொழில்நுட்பங்கள் வல்லரசு நாடுகளை பிரிக்குமா? அல்லது ஒன்றிணைக்குமா?
சீனாவும், அமெரிக்காவும் வளர்ந்து வரும் உலகளாவிய தொழில்நுட்ப நிலப்பரப்பை வடிவமைக்க போட்டியிட்டு வருகின்றன. மூலோபாய தொழில்நுட்பங்கள் வல்லரசு நாடுகளை பிரிக்குமா? அல்லது ஒன்றிணைக்குமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மேலும் படிக்க5:58 PM
ஹசீனா வீழ்ச்சிக்குப் பிறகு முகமது யூனுஸை சந்தித்து பேசிய பிரதமர் மோடி!
Narendra Modi Meets Muhammad Yunus at BIMSTEC Summit : பாங்காக்கில் நடந்த பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்தார். ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு அவர்களது முதல் சந்திப்பு இதுவாகும்.
மேலும் படிக்க5:25 PM
Test Twitter Review: ஓடிடியில் நேரடியாக வெளியான 'டெஸ்ட்' பாஸா? பெயிலா?
நயன்தாரா நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ள, 'டெஸ்ட்' திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம் பற்றி பார்க்கலாம்.
5:22 PM
விக்சித் பாரத் 2047க்கான ஸ்டார்ட்அப் மஹாகும்ப் டெல்லியில் தொடங்கியது!
Startup Mahakumbh Kicks Off In Delhi : டெல்லியில் ஸ்டார்ட் அப் மகாகும்பத்தின் 3 நாட்கள் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்வில் முதலீட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க5:15 PM
குஷியில் அமைச்சர் ஐ.பெரியசாமி! 17 ஆண்டு கால வழக்கில் இருந்து ஒரு வழியாக விடுதலை!
அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க4:52 PM
5,614 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைத்து NHAI புதிய சாதனை! இலக்கை விட அதிகம்!
2025 நிதியாண்டில் இந்தியா முழுவதும் 5,614 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய சாதனை படைத்துள்ளது.
4:27 PM
சகோதரரின் மனைவியை கொடுமைப்படுத்திய வழக்கு; ஹன்சிகா காவல்துறையில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தன்னுடைய சகோதரரின் மனைவியை ஹன்சிகா மோத்வானி கொடுமைப்படுத்தியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக அவர் அளித்த மனு குறித்து மும்பை போலீஸ் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4:16 PM
பாஜக தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. ! தொண்டனாக பணி தொடரும்- அண்ணாமலை அதிரடி
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் அவர் தலைவர் பதவியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க3:59 PM
ட்ரம்ப் அதிர்ச்சி கொடுத்தாலும் 'நோ' கவலை; இந்திய முதலீட்டாளர்கள் செம மகிழ்ச்சி!
டொனால்ட் டிரம்ப்-ன் புதிய வரி விதிப்பு முறைகள் உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா-அமெரிக்க வர்த்தகம் மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.
மேலும் படிக்க3:45 PM
இபிஎஸ் அணியில் அதிகரித்து வரும் பாஜக ஆதரவாளர்கள்! இது அதிமுகவின் எதிர்காலத்துக்கு நல்லதா? கே.சி.பழனிசாமி பகீர்
KC Palanisamy: அதிமுகவில் பாஜக ஆதரவு நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க3:42 PM
சத்யராஜ் - காளி வெங்கட் நடிக்கும் படத்தின் வித்தியாசமான டைட்டில் லுக் வெளியானது!
சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய படத்திற்கு, 'மெட்ராஸ் மேட்னி' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
3:38 PM
சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் முதல் இந்தியர்! யார் இந்த சுபான்ஷு சுக்லா?
முதன்முறையாக சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் கேப்டன் சுபான்ஷு சுக்லா. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்க3:05 PM
Hyundai Creta! இந்த ஒரே காரை 1.5 லட்சம் இந்தியார்கள் வாங்கியிருக்காங்க - அப்படி என்ன ஸ்பெஷல்?
அறிக்கைகளின்படி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை க்ரெட்டா விற்பனை செய்துள்ளது. க்ரெட்டா இந்த சாதனையை பத்து வருடங்களில் அடைந்தது.
மேலும் படிக்க3:04 PM
Pandian Stores 2: பழனியை அசிங்கப்படுத்த கீழ்த்தனமாக இறங்கிய சுகன்யா! கேவலப்படுத்திய பாண்டியன்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின், இன்றைய எபிசோடில் பழனிவேல் தன்னை டார்ச்சர் செய்கிறார் என்று சுகன்யா வீட்டில் உள்ளவர்களிடம் புகார் செய்து, தன்னை நல்லவர் போன்று காட்டிக் கொள்கிறார்.
2:48 PM
டாடானா சும்மாவா! 1 வருடத்தில் இத்தனை லட்சம் கார்களா? வியக்க வைக்கும் Tata Punch விற்பனை
2025 நிதியாண்டில் இந்தியாவில் அதிகம் விற்பனையான முதல் ஐந்து எஸ்யூவிகளின் விவரங்கள் வெளியாகியுள்ளன. டாடா பஞ்ச் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி பிரெஸ்ஸா உள்ளன.
மேலும் படிக்க2:38 PM
தமிழ்நாடு முழுவதும் வக்பு சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!
2:37 PM
வக்பு சட்டத்திற்கு எதிராக டிவிகே ஆர்ப்பாட்டம்!!
2:35 PM
கார் பார்க்கிங் விவகாரத்தில் நடிகர் தர்ஷன்!!
2:31 PM
ஒரே அடியாக தள்ளிவைக்கப்பட்ட தனுஷின் இட்லி கடை - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு
தனுஷ் நடித்து இயக்கி உள்ள இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி ரிலீஸ் ஆகாது என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க2:30 PM
ஒருவழியா இந்தியாவில் அறிமுகமாகிறது Super Car! Lamborghini Temerario விலை எவ்வளவு தெரியுமா?
லம்போர்கினி இறுதியாக ஏப்ரல் 30, 2025 அன்று டெமராரியோவை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. நீங்கள் பார்க்க வேண்டிய விவரங்கள் இங்கே.
மேலும் படிக்க2:14 PM
ரூ.1000 மட்டுமே! 3 மடங்கு லாபம் - உங்களை பணக்காரனாக்கும் திட்டம்!
இன்றைய சந்தை நிலவரப்படி, அனைவரும் எதிர்காலத்திற்காக கொஞ்சம் சேமிக்க நினைக்கிறார்கள். ஆனால் எங்கே சேமிப்பது என்று தெரியவில்லை? எங்கு வேண்டுமானாலும் பணம் வைத்தால் சந்தை அபாயம் உள்ளது. எனவே இந்த திட்டத்தில் பணத்தை போடுங்கள். உங்கள் பணம் பல மடங்காக உயரும்.
மேலும் படிக்க2:07 PM
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,984 கோடியில் 3வது ஏவுதளம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
ஸ்ரீஹரிகோட்டாவில் 3வது ஏவுதளம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
2:01 PM
ஆவின் வேலைவாய்ப்பு 2025: ஏப்ரல் 10 வரை விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!
ஆவின் (தஞ்சாவூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட்) 2025 ஆம் ஆண்டிற்கான கால்நடை ஆலோசகர் பணியிடத்தை நிரப்ப உள்ளது. தகுதி, நேர்காணல் விவரங்களை அறிந்து கொண்டு ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்!
மேலும் படிக்க2:01 PM
நடிகர் ரவிகுமார் காலமானார்; இவர் இந்த நடிகையின் முன்னாள் கணவரா?
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகர் ரவிகுமார் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்த சம்பளம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1:44 PM
2025-ல் எந்த அரசுப் பல்கலையில் சேரலாம்? தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைக்கழங்களின் லிஸ்ட் இதோ..
தமிழகம், தென்னிந்தியாவின் கல்வி மையமாகத் திகழ்வது அனைவரும் அறிந்ததே. இங்குள்ள அரசுப் பல்கலைக்கழகங்கள் தலைமுறை தலைமுறையாக மாணவர்களின் அறிவுக் கண்களைத் திறந்து, உயர்கல்வியில் சிறந்து விளங்க உறுதுணையாக இருந்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நெருங்கி வரும் நிலையில், நம் மாநிலத்தில் உள்ள அரசுப் பல்கலைக்கழகங்களின் முழுமையான பட்டியலையும், அவற்றின் சிறப்பம்சங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். இதோ உங்களுக்காக ஒரு விரிவான தொகுப்பு:
மேலும் படிக்க1:39 PM
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை அடிச்சு ஊத்தப்போகுது? வானிலை மையம் முக்கிய அப்டேட்!
Tamilnadu Heavy Rain:தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்கள் என்பதை பார்ப்போம்.
மேலும் படிக்க1:18 PM
ரூ .1.5 லட்சம் வரை வருமான வரியை சேமிக்கலாம்! இதை பண்ணா மட்டும் போதும்!
பழைய வருமான வரி முறையில் பிரிவு 80C-யின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். பிரிவு 80CCC, 80CCD ஓய்வூதிய திட்டங்களுக்கான வரி சேமிப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. முதலாளியின் NPS பங்களிப்பிற்கும் வரிச் சலுகைகள் உண்டு.
மேலும் படிக்க1:16 PM
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு! பல்வேறு இடங்களில் தவெக போராட்டம்
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தவெக கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
1:12 PM
700 கிமீ ரேஞ்ச், வெறும் 5 நிமிடங்கள் போதும்! EV கார்களுக்கெல்லாம் இது தான் கிங் - Hyundai Nexo FCEV
நீங்கள் நீண்ட தூரத்தை கடக்கும் மற்றும் விரைவாக சார்ஜ் செய்யும் கார் விரும்பினால், ஹூண்டாய் நெக்ஸோ FCEV உங்களுக்கு சிறந்தது. இது ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தில் இயங்குகிறது மற்றும் 5 நிமிடங்களில் முழு டேங்கைப் பெறுகிறது. சக்திவாய்ந்த தோற்றம், உயர் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட எதிர்கால கார் இது.
மேலும் படிக்க1:08 PM
ரசிகர்களின் பேவரைட் சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டு வரும் விஜய் டிவி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த புத்தம் புது சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டுவர உள்ளனர். அதன் கிளைமாக்ஸ் ஷூட்டிங்கும் அண்மையில் நடைபெற்றுள்ளது.
மேலும் படிக்க1:07 PM
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அட்மிஷன்-2025 ஆரம்பம்: என்ன கோர்ஸ்லாம் இருக்குனு பாருங்க!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை அறிக. கலை, அறிவியல், வணிகம் மற்றும் பல துறைகளில் உயர்தர கல்வியைப் பெற விண்ணப்பிக்கவும்!
மேலும் படிக்க1:07 PM
மோடி அரபு நாடுகளில் பயணம் செய்யும்போது மசூதியை மூட முடியுமா.? கேள்வி கேட்கும் சீமான்
பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவிற்காக மசூதி மினாரா மூடப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இது திமுக அரசின் சமத்துவமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க1:06 PM
CSK vs DC: சிஎஸ்கேவில் களமிறங்கும் அதிரடி வீரர்! பவர்பிளே தெறிக்க போகுது! பிளேயிங் லெவன்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.
மேலும் படிக்க1:06 PM
மாணவர்களை கொல்லும் நீட் தேர்வுக்கு முடிவு கட்டணும்! இனியும் தாமதம் செய்யக்கூடாது! அன்புமணி!
Cancel NEET Without Further Delay: நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய தொடர் நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க12:52 PM
ஐட்டம் டான்ஸுக்கு ஹீரோயின்களை விட அதிகம் சம்பளம் பெற்ற சில்க் ஸ்மிதாவின் சோகம் நிறைந்த வாழ்க்கை!
80'ஸ் காலகட்டத்திலேயே நடிகை சில்க் ஸ்மிதா, ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு மட்டும் ரூ.50 ஆயிரம் வரையில் சம்பளம் வாங்கி இருந்தாலும் இவரின் வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.
12:46 PM
சொளையா 40% தள்ளுபடி.. கொளுத்தும் வெயிலை சமாளிக்க AC-யை வாங்கி போடுங்க!
வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்திலேயே சூரியன் நெருப்பைக் கக்கத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரியைத் தாண்டியுள்ளது. வீட்டை விட்டு வெளியே செல்ல மனம் இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால் இப்போது நீங்கள் ஏர் கண்டிஷனரை Flipkart-ல் குறைந்த விலைக்கு வாங்கலாம்.
மேலும் படிக்க12:19 PM
சட்டப்பேரவையில் எதிரொலித்த எம்புரான் பட சர்ச்சை! முதல்வர் ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்!
எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது.
மேலும் படிக்க12:00 PM
டேங்க் ஃபுல் பண்ணா 700 கி.மீ ஓடும் Hero பைக்; விலை ரொம்ப கம்மியா இருக்கே!
ஹீரோ ஸ்ப்ளெண்டர் பிளஸ் XTEC 2.0 பைக் குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் சிறந்த தேர்வாக உள்ளது. இது 700 கி.மீ வரை பயணிக்கக்கூடியது, நவீன அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த எஞ்சினைக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க11:49 AM
10 வயசுதான் ஆகுது; அதற்குள் ரேஸ் கார் ஓட்ட கற்றுக் கொண்ட அஜித் மகன் ஆத்விக்!
நடிகர் அஜித்குமார் ரேஸில் ஆர்வம் காட்டி வருவதைப் போல் அவரது மகன் ஆத்விக்கும் தந்தையுடன் ரேஸ் கார் ஓட்டி அசத்தியபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகிறது.
மேலும் படிக்க11:48 AM
ஐஸ்க்ரீம் தான் நமது ஸ்டாட்அப் நிறுவனமா? பியூஸ் கோயல் வருத்தம்!!
இந்தியாவின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பு நகர்ப்புற உயரடுக்கை சார்ந்த சேவைகளை விட ஆழமான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார். சீன நிறுவனங்கள் மின்சார வாகனத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வது போல், இந்திய ஸ்டார்ட்அப்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க11:47 AM
Skoda நிறுவனத்தை தூக்கி நிறுத்திய சாமானியனின் Kylaq SUV கார்! இந்த ஒரு காருக்கு அவ்வளவு டிமாண்ட்
2025 மார்ச்சில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா அதிகபட்ச மாதாந்திர விற்பனையை அடைந்தது. கைலாக் எஸ்யூவி, குஷாக், ஸ்லாவியா மாடல்கள் முக்கிய பங்கு வகித்தன. உற்பத்தியை 30% அதிகரிக்க ஸ்கோடா இலக்கு வைத்துள்ளது.
மேலும் படிக்க11:43 AM
நீட் தேர்வுக்கு முடிவுக்கட்ட ஸ்டாலின் திட்டம்.! சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் - தேதி குறித்த தமிழக அரசு
நீட் தேர்விற்கு எதிரான தமிழக அரசின் மசோதாவை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும், அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க11:33 AM
Saniya Iyappan: என் காதல் தோல்விக்கு இது தான் காரணம்! 22 வயது சானியா ஐயப்பன் கூறிய ஷாக் தகவல்!
தமிழில் ஆர் ஜே பாலாஜிக்கு ஜோடியாக, 'சொர்கவாசல்' படத்தில் நடித்து பிரபலமான சானியா ஐயப்பன் தன்னுடைய காதல் தோல்வி குறித்து முதல் முறையாக பேசியுள்ளார்.
11:33 AM
12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தம் பணி தொடங்கியது! பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழ்நாட்டில் 12, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? விடைத்தாள் திருத்தும் பணி எப்போது தொடங்குகிறது? முழு விவரம் உள்ளே.
மேலும் படிக்க11:21 AM
பெங்களூரு பார்க்கிங் வரியில் பெரும் மாற்றம்! அடேங்கப்பா! ஓராண்டுக்கு இவ்வளவு செலுத்தனுமா?
பெங்களூருவில் பார்க்கிங் வரி விதிப்பில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மேலும் படிக்க11:17 AM
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகள் - ஏப்ரல் 4 பரிந்துரை இதோ
உலகளாவிய சந்தை அழுத்தங்கள், அமெரிக்க கட்டணக் கொள்கைகள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் நிதி அறிக்கைகள் இந்திய பங்குச் சந்தையை பாதிக்கின்றன. முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், பல்வகைப்படுத்தப்பட்ட முதலீடுகளில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க11:15 AM
கொடைக்கானலுக்கு செல்ல மாற்று வழி.! சட்டப்பேரவையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கொடைக்கானலில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு மாற்றுப்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க11:00 AM
எம்புரான் பட தயாரிப்பாளர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய திடீர் ரெய்டு!
மோகன்லால் நடித்த எம்புரான் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு சொந்தமான நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறதாம்.
மேலும் படிக்க10:36 AM
பேருந்துக்கு டிக்கெட் புக் செய்ய அலைய வேண்டாம்.! சூப்பர் திட்டம் அறிமுகம்.? போக்குவரத்து துறை அசத்தல்
தமிழக அரசு கிராமப்புற மக்களின் வசதிக்காக இ-சேவை மையங்களில் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் 530-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
மேலும் படிக்க10:16 AM
பிரதமர் மோடி-ஷினவத்ரா சந்திப்பு! இந்தியா-தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து சென்று பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை சந்தித்து பேசினார். இரு நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் படிக்க10:15 AM
டாஸ்மாக் வழக்குகள் மீண்டும் வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றமா? என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்!
TASMAC Case: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க10:14 AM
இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! போட்டிப்போட்டு வாங்குறாங்க - எது?
டிவிஎஸ், ஓலா, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ போன்ற முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் எந்த நிறுவனம் அதிக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க10:05 AM
3 மாதத்தில் 60 பிளாப் படங்களா? கோலிவுட்டின் காலாண்டு ரிப்போர்ட் ஒரு பார்வை
2025-ம் ஆண்டு தொடங்கி விறுவிறுவென சென்று கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தமிழில் இதுவரை வெளிவந்த 64 படங்களில் 60 படங்கள் தோல்வியை தழுவி இருக்கிறதாம்.
மேலும் படிக்க9:48 AM
இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை : தனுஷ் வழக்கில் ஆர்.கே.செல்வமணியின் ரியாக்ஷன்
நடிகர் தனுஷ் மீது 5 ஸ்டார் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து சோஷியல் மீடியாக்களில் பல விதமான தகவல்கள் பரவி வரும் நிலையில் அது பற்றி கருத்து தெரிவித்துள்ளார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி
மேலும் படிக்க9:44 AM
ஒரே நாளில் சரசரவென குறைந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவா.? நகைப்பிரியர்களுக்கு குஷியோ குஷி
தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் உயர்ந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1280 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க9:41 AM
பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்
பிரபல நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் மனோஜ் குமார் (87) மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மனோஜ் குமாரின் தேசபக்தி உணர்வு தலைமுறைகளை ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க9:36 AM
கேரளா ஸ்டைல் முட்டை ஆப்பம் சாப்பிடிருக்கீங்களா?
வழக்கமாக ஆப்பம்-தேங்காய் பால் காம்போவை கேள்விப் பட்டிருப்போம். ஆனால் கேரளாவில் ஆப்பத்திலும் பல வகை உள்ளது. அதில் வித்தியாசமான சுவையை விரும்புபவர்கள், ஆரோக்கியமாக சாப்பிட விரும்புபவர்களின் சிறந்த தேர்வாக இருப்பது தான் கேரளா முட்டை ஆப்பம் வகையாகும்.
மேலும் படிக்க9:21 AM
போட்டி போட்டு உங்க போட்டோகளை AI இமேஜா மாத்துறீங்களா? இதை கவனிக்க மறந்துட்டீங்களே பாஸ்
ChatGPT மற்றும் Grok 3 இல் உள்ள Ghibli-பாணி AI கலை ஜெனரேட்டர்கள் ஒரு புதிய ஆன்லைன் மோகமாகும், ஆனால் பயனர்கள் அறியாமலேயே தனிப்பட்ட தரவைப் பகிரக்கூடும் என்பதால் தனியுரிமை கவலைகள் எழுகின்றன.
மேலும் படிக்க9:20 AM
அமெரிக்காவின் வரிகள் இந்தியாவை பாதிக்குமா? ரகுராம் ராஜன் கொடுத்த அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ரகுராம் ராஜன் கூறுகையில், இது இந்தியாவை அதிகம் பாதிக்காது. மேலும் இது அமெரிக்காவிற்கே எதிர்மறையாக முடியும்.
மேலும் படிக்க9:20 AM
உளவுத்துறை அச்சம்; சீனாவில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு பறந்த புதிய உத்தரவு; காரணம் என்ன?
சீனாவில் பணிபுரியும் அமெரிக்க அரசு ஊழியர்கள் சீனர்களை காதலிக்கவோ, பாலியல் உறவு வைத்துக்கொள்ளவோ கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பனிப்போரே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க9:04 AM
இலவச வீட்டு மனை பட்டா.! எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களுக்கு தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு
தமிழக சட்டமன்றத்தில் வருவாய் மற்றும் பேரிடர் துறையின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அலுவலக கட்டடங்கள், பேரிடர் மேலாண்மை கருத்தியல் தளம், கல்லூரி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடம், புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க8:59 AM
பூப்போல கோதுமை இட்லி எப்படி செய்வது ?
கோதுமையில் சப்பாத்தி, தோசை, உப்புமா என்று தான் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக கோதுமையில் பூப்போல இட்லி செய்து சாப்பிட்டு பாருங்கள். இது ஆரோக்கியமானது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
மேலும் படிக்க8:45 AM
இது தான் லாஸ்ட் வார்னிங்! ஆசிரியர்கள் மட்டுமல்ல தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
தமிழக பள்ளிகளில் ஆண்டு விழாக்களை சிறப்பாக நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில பள்ளிகளில் விதிமீறல்கள் நடந்ததால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க8:45 AM
ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு – எது சிறந்த தோசை?
இந்தியா முழுவதும் பிரபலமான உணவுகளில் தோசையும் ஒன்று. இவற்றில் தென்னிந்தியாவில் பிரபலமாக இருப்பதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என எந்த ஊர் தோசை சிறப்பானது என்பது நீண்ட நாளாக மிகப் பெரிய விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
மேலும் படிக்க8:20 AM
உடற்பயிற்சியோட பலன்கள் தெரிய இவ்வளவு நாட்களாகுமா? பொறுமை முக்கியம்!!
புதியதாக உடற்பயிற்சி செய்ய தொடங்குபவர்களுக்கு அதனால் ஏற்படும் மாற்றங்களை காண எவ்வளவு நாட்கள் ஆகும் என இந்தப் பதிவில் காணலாம்.
மேலும் படிக்க8:16 AM
திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? நப்பாசையோடு காத்திருக்கும் கட்சிகள் - சீறிய ஸ்டாலின்
மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின், பாஜக கூட்டாட்சிக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மாநில உரிமைகளை காக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் படிக்க8:01 AM
TNUSRB: தமிழக காவல்துறையில் 1299 எஸ்.ஐ காலிப்பணியிடங்கள்: அறிவிப்பு வெளியானது!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் 2025 ஆம் ஆண்டிற்கான காவல் சார் ஆய்வாளர் (துறை மற்றும் ஆயுதப்படை) பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய முழுமையான விவரங்களை இங்கே காணலாம்.
மேலும் படிக்க8:01 AM
இதுதான் லிமிட்! புதிய லக்கேஜ் விதிகளை கொண்டு வந்த இந்தியன் ரயில்வே - மீறினால் அபராதம்
இந்திய ரயில்வே ஏப்ரல் 2025 முதல் லக்கேஜ் விதிமுறைகளை மாற்றியுள்ளது. பயணிகளின் வசதிக்காக வகுப்புகளின் அடிப்படையில் எடை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதிக எடை கொண்ட சாமான்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் படிக்க7:43 AM
டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் இந்த தேதியில் விடுமுறை.! மதுப்பிரியர்களுக்கு ஷாக் தகவல்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு குறிப்பிட்ட 8 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 10ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளது
மேலும் படிக்க7:42 AM
குரல் இனிமையாக இருக்க பாம்பின் விந்தணு காக்டெயில் குடிக்கும் பாடகி!
பாடகர்கள் தங்கள் குரல் நன்றாக இருக்க பலவிதமான மருந்துகளை குடிப்பார்கள். ஆனால் இங்கே ஒரு பாடகி தன் குரல் இனிமையாக இருக்க பாம்பின் விந்தணு குடிக்கிறார்.
மேலும் படிக்க7:40 AM
கெஸ்ட் ரோல் அரசியல்வாதி சைதை துரைசாமி! அதிமுக இப்படி கொதிக்க இதுதான் காரணமா?
அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் அறிக்கை குறித்து அதிமுக ஐடி விங் விமர்சனம். எம்.ஜி.ஆர் அணுகுமுறையை பின்பற்றவும், பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் அவர் கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க7:38 AM
வெயிட்டிங் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்கலாமா? ரயில்வே கொண்டு வந்த புதிய விதிமுறை
வெயிட்டிங் டிக்கெட்டுகளுக்கான இந்திய ரயில்வே விதிகள்: ரயில்களில் காத்திருப்பு டிக்கெட்டுகள் தொடர்பாக இந்திய ரயில்வேக்கு ஒரு விதி உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காத்திருப்பு டிக்கெட்டுடன் ரயிலில் ஏறினால், இவ்வளவு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க