#Breaking:காய்ச்சல், தலைவலி இருக்கா..? உடனே டெஸ்ட் எடுங்க..அலர்ட் செய்த சுகாதாரத்துறை.

By Thanalakshmi VFirst Published Jan 10, 2022, 7:39 PM IST
Highlights

காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, மூச்சுதிணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
 

காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, மூச்சுதிணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுபாடுகள் விதிக்கபட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவல் தீவிரத்தால் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசு பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில், கரோனா பரிசோதனை தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அதில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, மூச்சுதிணறல்,உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்து அறிகுறி இல்லாதவர்கள் கொரோனா பரிசோதனை செய்ய தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவரகள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 13,990 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  நேற்று பாதிப்பு 12,895 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் 1,095 அதிகரித்து 13,990  பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6,190 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. நேற்று 6186 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று மேலும் அதிகரித்து 6190 ஆக பதிவாகியுள்ளது.மேலும் கொரோனா தொற்றிற்கு இன்று ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து இன்று மட்டும் 2,547 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று 1,808 பேர் தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இன்று டிஸ்சார்ஜ் எண்ணிகை அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1696 பேருக்கும், திருவள்ளூரில் 1054 பேருக்கும், கோவையில் 602 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 508 பேருக்கும் தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது. மதுரையில் 330 பேருக்கும், திருச்சி 348 பேருக்கும், ராணிப்பேட்டையில் 272 பேருக்கும் வேலூரில் 236 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, மூச்சுதிணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

click me!