வாத்தியார் வக்கிர புத்தி.. 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய கொடூரம்.. சிக்கியது எப்படி?

By vinoth kumar  |  First Published May 8, 2024, 11:29 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட அந்த சிறுமி இசை பயிற்சி பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் சேர்ந்தார். 


இசை பயிற்சி சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட அந்த சிறுமி இசை பயிற்சி பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் சேர்ந்தார். இந்நிலையில் அந்த பள்ளியில் இசை ஆசிரியராக உள்ள பிரசாந்த் செபாஸ்டியன் என்பவர் சிறுமியுடன் ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகி, அவளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: கல்யாணம் ஆகி 26 ஆண்டுகளுக்கு பிறகு வந்த சந்தேகம்... 47 வயது மனைவியை கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன?

கடந்த கடந்த 3ம் தேதி சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் மகளை  ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 9 வார கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

 இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் விசாரணை நடத்திய பிறகு இசை ஆசிரியர் பிரசாந்த் செபஸ்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க:  நண்பனின் மனைவியை மடக்கி உல்லாசம்.. கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் பழனிவேல் கொலை.. ரசித்த செல்வி!

click me!