தமிழக அரசு தொல்லியல் ஆய்வுகளை ஊக்குவித்து வருவதாகக் கூறிய முதல்வர் அகழ்வாராய்ச்சிக் களங்களைப் பார்வையிட வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சிகளில் அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசு தொல்லியல் துறை ஆய்வுகளை ஊக்குவித்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வட அமெரிக்க தமிழ் சங்கப் பேரவை மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்றிருந்தார். அப்போது சிறப்புரை வழங்கிய முதல்வர், ’யாதும் ஊரே; யாரும் கேளிர்’ என்ற கணியன் பூங்கொன்றனார் எழுதியதைக் குறிப்பிட்டு, தமிழ் மொழி எப்போதும் அனைத்து மக்களையும் வாழ வைக்கும் என்று உறுதி கூறினார்.
கல்லூரியில் சேர வசதி இல்லையா? ஆன்லைனில் எளிமையாக ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்கலாம்!
: FeTNA - சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் நடத்தும் 36-ஆவது தமிழ்விழாவில் உரைhttps://t.co/eeVWLnqwvu
— M.K.Stalin (@mkstalin)பின்னர் தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிகள் பற்றிப் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசு தொல்லியல் ஆய்வுகளை ஊக்குவித்து வருகிறது. நாட்டிலேயே அதிக அளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில்தான் என்றும் அவர் எடுத்துரைத்தார். வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டில் நடைபெறும் தொல்லியல் அகழ்வாராய்ச்சிக் களங்களையும் கீழடி அருங்காட்சியகத்தையும் பார்வையிட வருமாறும் முதல்வர் அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு அரசின் சிறு, குறு தொழில் துறையின் கீழ் செயல்படும் டான்செட் (TANSET) நிறுவனம் வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புடன் (Federation of Tamil Sangams of North America) இணைந்து புத்தொழில் மாநாட்டை நடத்தியது. இதன் மூலம் அமெரிக்க தமிழ் நிதியம் அமைப்பின் முலம் ரூ.10 கோடி நிதி தமிழ்நாடு தொடக்க நிலை புத்தொழி நிறுவங்களின் முதலீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் சுட்டிக்காட்டினார்.
சில்லென்று மாறும் வானிலை! 8 மாவட்டங்களில் இன்று கனமழை கொட்டித் தீர்க்கும்!
வரலாற்றுச் சிறப்பு மிக்க கீழடியில் கடந்த ஏப்ரல் மாதம் 9வது கட்ட அகழ்வாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கீழடியில் மட்டுமின்றி அதற்கு உள்ள அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களிலும் 9ஆம் கட்ட அகழ்வாய்வு தொடங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு என்ற இடத்தில் மாநில தொல்லியல் துறையின் மூன்றாவது கட்ட அகழாய்வு தொடக்கப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியில் சில நாட்களுக்கு முன்ர பழங்கால நாணய அச்சு, உடைந்த சீனப் பானை ஓடு முதலிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.