
தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை போல அல்லாமல் புதுச்சேரியில் மது விற்பனை என்பது பொதுவாகவே பெரிய அளவில் நடக்கும். குறிப்பாக மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்கள் மதுபான கடைகள் மற்றும் உணவகங்களில் பல்வேறு வகையான விளம்பரங்களை வைத்து மதுபான விற்பனையை செய்து வருகின்றனர்.
குறிப்பாக ஒரு மதுபாட்டில் வாங்கினால் இன்னொரு மது பாட்டில் இலவசம், ஒரு மது பாட்டில் வாங்கினால் இலவச உணவு, பெண்களுக்கு இலவச மது என்று தங்கள் கடை முன்பு பலவகையான விளம்பர பதாதைகளை வைத்து மது விற்பனை செய்வது அங்கு வழக்கமாக நடக்கும் ஒன்று.
இதையும் படியுங்கள் : என் மீது களங்கம் கற்பிக்க முயற்சி: ராஜேஸ்வரி பிரியா விளக்கம்!
இந்நிலையில் தற்பொழுது இது போன்ற விளம்பரங்களுக்கு ஆப்பு வைக்கின்ற விதத்தில் புதுச்சேரி அரசின் துணை ஆணையர் அலுவலகம்(கலால்) ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில் புதுச்சேரி கலால் துறையில் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது மதுபான கடைகளில் உணவகங்களில் அல்லது விடுதிகளில் மற்றும் சமூக வலைதளங்களில் மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அறிவிக்கக்கூடாது.
ஏற்கனவே விளம்பர பதாதைகள், சுவரொட்டிகள் வைத்திருப்பது குறித்து அவர்களுக்கு தெரிய வந்திருக்கிறது என்றும் ஆணையம் கூறியுள்ளது. எனவே மேற்கூறிய மதுபான விற்பனை உரிமை பெற்றவர்கள் தங்களது மதுபான கடைகள், உணவுகள் விடுதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள விளம்பரங்களை உடனடியாக நீக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விதிமுறைகள், தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அதனை மீறுபவர்கள் மீது புதுச்சேரி கலால் வீதிகளின்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு