மயக்க ஊசி செலுத்தியும் ஆட்கொல்லி புலி T23 புலி தப்பியோடியதால் வனத்துறையினர் குழம்பி போயுள்ளனர்.
உதகை: மயக்க ஊசி செலுத்தியும் ஆட்கொல்லி புலி T23 புலி தப்பியோடியதால் வனத்துறையினர் குழம்பி போயுள்ளனர்.
undefined
நீலகிரி மாவட்டத்தில் மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் கால்நடைகளையும், மனிதர்களையும் புலி ஒன்று தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. பொதுமக்களின் பலத்த போராட்டம் மற்றும் கோர்ட் உத்தரவுப்படி அந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் களத்தில் இறங்கினர்.
மோப்ப நாய்கள், கும்கி யானைகள் வனத்துறையுடன் தேடுதல் வேட்டையில் பயன்படுத்தப்பட்டன. புலி நடமாடும் பகுதிகள் என்று கண்டறியப்பட்ட கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டது.
இந் நிலையில் மசினகுடி காட்டு பகுதியில் புலி நடமாட்டத்தை கண்டுபிடித்து வனத்துறையினர் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். ஆனாலும், எதை பற்றியும் சட்டை செய்யாது பொசுக்கென்று மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் புலி தப்பியோடி விட்டது.
மயக்க ஊசி குத்தப்பட்டு விட்டதால் தப்பியோடினாலும் எங்கேனும் சோர்வுடன் படுத்திருக்கும் என்பதால் எளிதில் புலியை பிடித்துவிடலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆகவே பொதுமக்கள் எங்கும் தனியாக நடமாட வேண்டாம் என்றும் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.