இனி 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர் கல்வி படிக்க செல்லலாம் ..! அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்..!

By thenmozhi gFirst Published Sep 15, 2018, 6:19 PM IST
Highlights

பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர் கல்வி படிக்கச் செல்லலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே உயர் கல்வி படிக்கச் செல்லலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னை தலைமை செயலகத்தில், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அரசாணை ஒன்றை வெளியிட்டார். 12 ஆம் வகுப்புக்கு 600 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்தார். நடப்பு கல்வி ஆண்டு முதல் பிளஸ் 2 பொது தேர்வு 600 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நடைபெறும் என்றார்.கடந்த ஆண்டில் உயர் கல்வி சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் அடிப்படையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் நடைமுறை இருந்தது.

11 ஆம் வகுப்பிற்கும் அரசு பொது தேர்வு என்ற முறையை புதிதாக அறிமுகம் செய்தது. தற்போது இந்த நடைமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

10, 11 மற்றும் 12 என மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக அரசு பொது தேர்வை மாணவர்கள் சந்தித்து வருவதால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் நிலை இருந்து வருகிறது. இதனால், இந்த முறையை மாற்றி தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், உயர் கல்விக்கு 12 ஆம் வகுப்பிற்கான மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் இனி வழங்கப்படாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய முறையில் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் மட்டுமே 12 ஆம் வகுப்புக்கான தேர்வு எழுத முடியும். ஆனால், புதிய முறையில் கல்லூரியைப் போன்று 11 ஆம் வகுப்பில் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்ச்சியடைவில்லை என்றாலும் 12 ஆம் வகுப்பிற்கான தேர்வை எழு தமுடியும்.

 அதே நேரத்தில் மாணவர் 11 ஆம் வகுப்பு தேர்வையும் இணைந்து எழுத வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!