
மாணவர்களுக்கு முதிர்ச்சி இல்லை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான கலந்தாய்வு கூட்டம் பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறார். அந்த வகையில், திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்காதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பல மொழி பேசும் இன மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒவ்வொரு மொழிக்கும் கலை, கலாச்சாரம், மொழி, வழிபாடு இவை வெவ்வேறாக உள்ளது. மும்மொழி கொள்கை அதில் என்ன இருக்கிறது.? பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மனமுதிர்ச்சி இல்லை நீட் தேர்வு அச்சத்தில் உயிரிழக்கின்றனர்.
பிரதமருக்கும், அமைச்சர்களுக்கும் தேர்வு வைக்கலமா.?
முதிர்ச்சியற்ற நிலையில் மாணவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் 3.5. 8ஆம் வகுப்புகளில் பொது தேர்வு கொண்டு வருவது எப்படி ஏற்க முடியும் என கேள்வி எழுப்பினார். மேலும் புதிய கல்விக் கொள்கை கட்டாய இந்தி மொழியை சொல்கிறது. பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்வார்களா.? எனவும் கேள்வி எழுப்பினார். வரியை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர்.? ஆனால் அங்கிருந்து கடிதம் அனுப்பும்போது இந்தியில் அனுப்புகின்றனர்.?
அவ்வளவு ரோஷம் இருப்பவர்கள் தமிழ்நாட்டின் வரியை ஏன் பெறுகிறீர்கள்.?. கட்டாயமாக இந்தியை படிக்கச் சொல்வது சரியல்ல என கூறினார். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காதது வரவேற்கத்தக்கது. இதற்காக நிதி ஒதுக்க முடியாது என சொல்வது கொடுங்கோல் ஆட்சி ஆணவத்தின் ஆட்டம் என கூறினார். நிதி ஒதுக்க மறுக்கும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து வரி வருவாயை தரக் கூடாது உடனடியாக அமைச்சரவையையும், சட்டசபையையும் கூட்டி இந்த முடிவை எடுக்க வேண்டும் எனவும் வலியுறத்தினார்.
அண்ணாமலைக்கு எச்சரிக்கை
ஆனந்த விகடன் இணையதளம் தடை செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவின் முதன்மை பொறுப்பில் உள்ள மோடி அவரது நாட்டு குடிகளை விலங்கிட்டு திருப்பி அனுப்பியது மோடிக்கு இட்ட விலங்காக தான் பார்க்க வேண்டும். அதை குறியீடாக வைத்து கருத்து படத்தை விகடன் வெளியிட்டது அதையே தாங்க முடியவில்லை என்றால் இந்த நாட்டு குடிகளை வலுக்கட்டாயமாக கைவிலங்கு போட்டு திருப்பி அனுப்பியதை விடவா இது அசிங்கமாக போய்விட்டது. சுதந்திரம் என்பதற்கு எந்த கருத்தும் இல்லை என கூறினார்.
அண்ணாமலை விகடனை எச்சரித்ததாக சொல்கிறார், ட்ரம்பை எச்சரிக்க வேண்டியது தானே, நாங்களும் அண்ணாமலையை எச்சரிக்கின்றோம் அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆடாதீர்கள் என எச்சரிக்கின்றேன் நாற்காலி நிரந்தரமானது அல்ல மேலே இருப்பது கீழே வரும் கீழே இருப்பது மேலே வரும் வரலாறு காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.. இது ஜனநாயக நாட்டிற்கு நல்லதல்ல என சீமான் கூறினார்.