தினமும் பொய்களையே அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைவர் என்றால் அது அண்ணாமலை தான்- விளாசும் சேகர்பாபு

Published : Feb 16, 2025, 11:11 AM IST
தினமும் பொய்களையே அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைவர் என்றால் அது அண்ணாமலை தான்- விளாசும் சேகர்பாபு

சுருக்கம்

அமைச்சர் சேகர்பாபு, திமுக ஆட்சியில் கோயில் திருப்பணிகள் மற்றும் நில மீட்பு குறித்து விளக்கினார். பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்களுக்கு கடும் பதிலடி கொடுத்தார்.

திமுக ஆட்சியில் அறநிலையத்துறை திட்டங்கள்

சென்னை வியாசர்பாடியில் உள்ள இரவீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் திருக்கோயிலில் புதுப்பிக்கப்பட்ட குளத்தை திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,  திமுக  ஆட்சி ஏற்பட்ட பிறகு 2,587 கோயிலில்களில் குடமுழுக்கு நடந்து உள்ளது.

கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 3 ஆயிரம் கோடி அளவில் கூட கோவில் நிலங்கள் கூட மீட்கப்பட்டிருக்காது. ஆனால் திமுக ஆட்சி அமைந்து 7,171 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதே போல 220 திருக்கோவில்களில் திருக்குளங்கள் 120 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்கள் புரணமைக்க 427 கோடி செலவில் 274 கோவில்கள் புரணமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது என தெரிவித்தார்.

ஒன்றுக்கும் உதவாத அண்ணாமலை

இந்த ஆண்டு நடைபெற்ற தைப்பூசத்தின் போது அறுபடை கோயில்களில் முறையான ஏற்பாடு செய்யவில்லை தமிழகத்தில் இருக்கும் துறைகளில் இந்து சமய அறநிலையத்துறை தான் உதவாதத்துறை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தது குறித்தான கேள்விக்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளில் எடுத்துக் கொண்டால் ஒன்றுக்கும் உதவாத தினம் தோறும் பொய்களையே அரசியல் ஆக்கிக் கொண்டிருக்கும் ஒரு தலைவர் என்றால் அது அண்ணாமலை தான் எனவும் ஒரு காலத்தில் பத்தாயிரம் பேர் தைப்பூசத்திற்கு கூடும் நிலைமை இருந்தது.  ஆனால் தற்பொழுது ஒரு நாளைக்கு 2 லட்சம் பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வருகிறார்கள், தைப்பூசம் தினத்தன்று அதிக அளவில் மக்கள் கூடும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்றால் போதிய வசதிகளை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என கூறினார்.

பக்தர்களின் தேவை பூர்த்தி செய்யும் அரசு

தைப்பூசம் தினத்தன்று தமிழ்நாட்டில் எந்த கோவில்களிலும் சிறு அசம்பாவிதங்கள் கூட நடக்கவில்லை, மூச்சுத் திணறல்கள் கூட ஏற்படவில்லை ஒழுங்காக நிம்மதியாக ஆன்மீக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் தேவைகளை முழுமையாக நிறைவேற்றும் அரசாக உள்ளது. ஆன்மீகத்தில் தலையிட்டு அரசியலாக நினைக்கும் அண்ணாமலையின் கபட நாடகம் தமிழ்நாட்டில் எடுபடாது, தமிழ்நாடு முதல்வர் இருக்கும் வரை அண்ணாமலையின் கனவு பகல் கனவாக தான் முடியும் என தெரிவித்தார்.

கும்பமேளா கூட்டநெரிசலில் பல பேர் உயிரிழந்தது குறித்தான கேள்விக்கு வடக்கில் நடக்கும் சம்பவங்கள் அண்ணாமலைக்கு கண்ணுக்குத் தெரியாது காதுக்கு கேட்காது, தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அண்ணாமலை எப்படி ஊதி பெரிதாக்கி இருப்பார். அண்ணாமலையின் எண்ணங்கள் முழுவதும் கலங்கப்பட்டுள்ளது, கள்ள எண்ணம் என்பதால் அண்ணாமலையின் எண்ணத்திற்கு அரசு செய்து வரும் செயல்கள் தெரியாது.

தினமும் பொய்களை பேசும் அண்ணாமலை

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த அண்ணாமலை போன்றவர்களின் கூற்றையெல்லாம் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அண்ணாமலை காலத்தில் தான் பாஜக வளர்ந்ததாக சொல்கிறாரே தவிர அவருடைய காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும் என தெரிவித்தார்.

அண்ணாமலை பொய்களையே தினம் தோறும் அறுவடை செய்து கொண்டிருந்தால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் முழுவதுமாக பாஜகவை தமிழக மக்கள் ஓரம் கட்ட தயாராகி விடுவார்கள். எப்படியாவது மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி ஒரு பிளவு அரசியலை நடத்த வேண்டும் என்று இந்து முன்னணி முயற்சி செய்கிறது என சேகர்பாபு விமர்சித்தார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வட மாவட்டத்துக்கு ரெஸ்ட்! தென் மாவட்டம் பக்கம் திரும்பும் மழை! எச்சரிக்கை ரிப்போர்ட்!
அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி