இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் டாப்.! மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையால் குஷியில் திமுக அரசு

Published : Feb 16, 2025, 10:25 AM ISTUpdated : Feb 16, 2025, 10:27 AM IST
இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் டாப்.! மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையால் குஷியில் திமுக அரசு

சுருக்கம்

மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீட்டில் தமிழகம் செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடம். ஒட்டுமொத்த தரவரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. ஊராட்சிகளின் செயல்பாடுகள், திறன் மேம்பாடு, நிதி பரிவர்த்தனைகளில் சிறந்து விளங்குகிறது.

மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு

தமிழகத்தில் மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மற்ற மாநிலங்களைவிட அடிப்படை வசதிகளும் மக்களை சென்று சேர்ந்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வு குறியீடு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது நிலையில் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை" என்ற தலைப்பில் மத்திய இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி. சிங் பாகேல், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் 2025 பிப்ரவரி 13 அன்று புது தில்லியில் வெளியிடப்பட்டது. 

இந்திய பொது நிர்வாக  (IIPA) நடத்திய ஆய்வறிக்கை

73 வது அரசியலமைப்பு திருத்தத்தில் கூறப்பட்டுள்ள உள்ளாட்சி" என்ற தொலைநோக்குப் பார்வையை உணர்ந்து ஊராட்சி நிறுவனங்களை (PRI) மேம்படுத்துவதற்கான பயணத்தில் புதுதில்லியில் உள்ள இந்திய பொது நிர்வாக நிறுவனம் (IIPA) நடத்திய இந்த ஆய்வறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மதிப்பீட்டை ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியலமைப்பு அதிகாரங்களை நிறைவேற்றுவதற்கு ஊராட்சி அமைப்புகள் எவ்வளவு பங்காற்றியுள்ளன என்பதற்கான ஆழமான பகுப்பாய்வை இந்த அறிக்கை வழங்குகிறது. மேலும் மாநில அரசு தமது கட்டுப்பாட்டில் உள்ள வளங்களைப் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சரியாக பகிர்ந்தளிப்பதில் எவ்வளவு செயல்திறனை உடையதாக உள்ளது என அளவீடு செய்கிறது. 

தமிழ்நாடு அதிக மதிப்பெண்

அதன் படி பின் வரும் குறியீடுகளின் அடிப்படையில் மாநிலங்களின் செயல்பாடுகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. 1. கட்டமைப்பு 2. செயல்பாடுகள் 3. நிதி 4. பிரதிநிதிகள், 5. திறன் மேம்பாடு, 6. பொறுப்புடைமை என ஒட்டு மொத்த குறியீட்டின் படி மாநிலங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது கடத்தில் உள்ளது ஊராட்சிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை செயல்படுத்தும் விநததிலும் அதிகாரப் பகிர்வு அளித்து திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விதத்திலும் முதலிடத்தில் உள்ளது. ஆய்வு அறிக்கையின் படி செயல்முறைப்படுத்தும் காரணிகளின் கணக்கீட்டின் படி தமிழ்நாடு அதிக மதிப்பெண்களையும். 'திறன் மேம்பாடு' மற்றும் 'செயல்பாடுகள்' ஆகியவற்றில் இரண்டாவது இடத்தையும், 

தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது

நிதி பரிவர்த்தணை' களை பொறுத்தவரை தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாடு ஊரக திட்டங்களில் ஊராட்சிகளின் ஈடுபாடு மிக உயர்ந்த தரத்தில் உள்ளது என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. ஊரக உள்ளாட்சியில் பொறுப்பு வகிக்கும் பிரதிநிதிகளின் 'திறன் மேம்பாடு' என்ற பரிமணத்தில் தேவையை மதிப்பிடுவதிலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சியை நடத்துவதிலும் மாநிலம் சிறந்து விளங்குகிறது எனவும் 'பயிற்சி நிறுவனங்களின் குறியீட்டில் மாநிலம் சிறப்பாக செயல்படுகிறது என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்