அமைச்சர் கே.என்.நேரு சொன்ன ஒற்றை வார்த்தை! ஷாக்கான கனிமொழி! அடுக்கிய குற்றச்சாட்டு!

Published : Feb 16, 2025, 01:33 PM IST
 அமைச்சர் கே.என்.நேரு சொன்ன ஒற்றை வார்த்தை! ஷாக்கான கனிமொழி! அடுக்கிய குற்றச்சாட்டு!

சுருக்கம்

தூத்துக்குடியில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படாதது, திருச்செந்தூரில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது, துப்புரவு பணியாளர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அலுவலர்களுக்கான  வளர்ச்சித் திட்டபணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள்  தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி, கீதா ஜூவன், சக்கரபாணி, அனிதா ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, சு.வெங்கடேசன், தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது தூத்துக்குடி எம்.பி. கனிமொழியை கே.என்.நேரு பேச அழைத்தார்.  

இதையும் படிங்க: மத்திய பாஜக அரசை கண்டிக்கக் கூட துப்பில்லாமல் ஒளிந்திருக்கும் பதுங்குக்குழி பழனிசாமி எங்கே? செந்தில் பாலாஜி!

நாடாளுமன்ற குழுவின் தலைவர் 'அண்ணியார் கனிமொழி தற்போது பேசுவார் என கூறிய போது அருகில் அமர்ந்திருந்த கனிமொழி ஷாக் ஆகி திரும்பி பார்த்தார். கூட்டத்தில் பேசிய எம்.பி. கனிமொழி தூத்துக்குடியில் ஜல் ஜூவன் பைப் லைன் இருக்கு ஆனா தண்ணீருக்கான வாய்ப்பு இல்லை. திருச்செந்தூரில் கூட்டத்தை சமாளிக்க போதுமான உள்கட்டமைப்பு இல்லை. அடிப்படை வசதியில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 

இதையும் படிங்க: செங்கோட்டையன் வைத்த கோரிக்கை! உடனே நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! நடந்தது என்ன?

மேலும் தூத்துக்குடியில் துப்புரவு பணிகளை சில தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுத்துள்ளதாகவும் அவர்களால் பணியாளர்களுக்கு பிரச்சனை உள்ளது என்று அடுத்தடுத்து புகார் தெரிவித்து கனிமொழி எம்.பி. கூட்டத்தில் இருக்கிற அதிகாரிகளை கிடுகிடுக்க வைத்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?