கோவில்பட்டி அருகே அதிர்ச்சி.. கலர் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு.. தாய் கவலைக்கிடம்..

By Thanalakshmi VFirst Published Aug 19, 2022, 5:33 PM IST
Highlights

தூத்துக்குடியில் பழச்சாறு குடித்த பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பழச்சாறு குடித்த கொஞ்ச நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 
 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியைச் சேர்ந்த  மகாலிங்கம் என்பவருக்கு சாந்தி என்ற மனைவியும் 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மகள் லட்சுமிபிரியா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறாள். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, பள்ளி முடிந்து வீடு திரும்பும்  போது , அப்பகுதியில் கடை ஒன்றி பழச்சாறு வாங்கியுள்ளனர். 

மேலும் படிக்க:இன்று 12 மாவட்டங்களில் கனமழை.. எங்கெல்லாம் அடித்து ஊற்றப்போகும் மழை.. வானிலை அப்டேட்

வீட்டிற்கு வந்ததும் அதை இருவரும் குடித்துள்ளனர். இந்நிலையில் பழச்சாறு குடித்த கொஞ்ச நேரத்திலேயே, இருவருக்கும் வாந்தி, மயக்கம், தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் சத்தமிடவே அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, கயத்தாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து ,ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு சிறுமி கொண்டு சென்ற போது, பாதியிலே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பழச்சாறு விற்பனை செய்த கடையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிறுமியின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கயத்தாறு காவல்நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சிறுமியின் இறப்பு தொடர்பாக சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

மேலும் படிக்க:பாத்திரத்தில் மாட்டிக்கொண்ட தலை.. வலி தாங்காமல் கதறி அழுது துடித்த ஒன்றரை வயது குழந்தை..

இதனிடையே, தாய் சாந்தி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பழச்சாறு குடித்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுப்போன்று கடந்த காலங்களில் கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு,  திருவண்ணாமலையில் சிக்கன் தந்தூரி சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு  உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.

click me!