சென்னையில் உள்ள புகாரி ஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் ப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது வாயில் உடைந்த கண்ணாடி துண்டு ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணாநகரில் உள்ள புகாரி ஹோட்டலில் குமரன் என்பவர் தனது நண்பர்களுடன் சிக்கன் ப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அந்த உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அதில் கண்ணாடி துண்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, அவர்கள் ஹோட்டல் மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, ஹோட்டல் ஊழியர்கள் அரிசி மூட்டையில் இருந்து கண்ணாடி துண்டுகள் வந்து இருக்கும் என்று கூறி சமாளித்த வேகத்தில் அந்த உணவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளித்த போது அவர்களை சமரசம் செய்து வெளியே அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் இந்த உணவகமே காரணம் என புகார் அளித்துள்ளனர்.