SC பசங்கனாலே பிரச்சனைதான், நீ எந்த சாதின்னு உன் மூஞ்சிலயே தெரியுது.. பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை சாதி வெறி.

By Ezhilarasan Babu  |  First Published Aug 19, 2022, 2:25 PM IST

அந்த குறிப்பிட்ட சாதி பசங்களால்தான் நமக்கு பிரச்சனை, நீ எந்த கம்யூனிட்டி என சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மாணவர் ஒருவரிடம் போனில் உரையாடியுள்ள ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அந்த குறிப்பிட்ட சாதி பசங்களால்தான் நமக்கு பிரச்சனை, நீ எந்த கம்யூனிட்டி என சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மாணவர் ஒருவரிடம் போனில் உரையாடியுள்ள ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியையின் இந்தப் பேச்சை பலரும் கண்டித்து வருவதுடன், அவர் ஆசிரியர் பணிக்கே தகுதி இல்லாதவர் என்று விமர்சித்து வருகின்றனர்.

நல்ல இளம் தலைமுறையை உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உள்ளது.  மாணவர்கள் மத்தியில் சமத்துவத்தை போதித்து சாதி மத பேதமற்ற சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கடமையும் ஆசிரியர்களுக்கு உள்ளது. ஆனால் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் பேராசிரியை ஒருவர் அதற்கு நேர்மாறாக மாணவர்களை சாதியை அடையாளப்படுத்தி சாதியின் அடிப்படையில் அவர்களை இழிவுபடுத்தி  பேசும் தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் இதை கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

பழமைமிகு பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக, பேராசிரியராக பணியாற்றி வருபவர் அனுராதா, இவர் தனது துறை மாணவர்களிடம் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. மாணவர்களின் பெயரைச்சொல்லி அவர்களின் சாதியை கேட்டு சாதிய பாகுபாடு விதைக்கும் விதமாக அவர் பேசியுள்ளார்.

undefined

அதில் ஒருவரின் முகத்தைப் பார்த்தாலே BC, MBC இல்ல SC யான்னு தெரிந்துவிடும்,  ஒரு குறிப்பிட்ட சாதி மாணவர்களால் தான் பிரச்சனையே வருகிறது, அந்த சாதி மாணவர்கள் தான் நமக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், உண்மையில் நீ என்ன சாதி என்று எனக்கு தெரியாது நீ என்ன கம்யூனிட்டி கண்ணு என பேராசிரியர் அனுராதா கேட்கிறார்.

அதற்கு அந்த மாணவன் நான் எம்பிசி எனக்கூற அதான் உன் முகத்திலேயே அது தெரிகிறது எனக்  கூறும் பேராசிரியை அனுராதா தமிழ் துறையில் உள்ள சில மாணவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் எந்த கம்யூனிட்டி என கேட்கிறார். அந்த மாணவன் என்ன சாதி என்பதை அறியும் ஆசிரியையிடம் கூறுகிறார் ஒரு மாணவனின் பெயரை சொல் அவனும் SC யாடா எனக் கேட்க அந்த மாணவன் ஆமாம் என கூற அதற்கு அந்த ஆசிரியை ஐயோ... என வெறுப்பு காட்டுவது போல அந்த ஆடியோ அமைந்துள்ளது. ஆசிரியரின் இந்த உரையாடல் சாதிய பாகுபாடுகளை உண்டாக்கும் நோக்கில் அமைந்துள்ளது.

இதேபோல கடந்த காலங்களில் சாதிய பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையில் பேராசிரியர் அனுராதா ஈடுபட்டதாகவும், அதன் அடிப்படையில் அவரை காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு இடபணிமாறுதல் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது ஆனால் நீதிமன்றத்திற்கு தடை பற்றி தொடர்ந்து சென்னை பச்சையப்பன் கல்லூரியிலேயே அவர் பணியாற்றி வருவதும்  தெரியவந்துள்ளது. மாணவர்களுக்கு சமத்துவத்தை போதிக்க வேண்டிய ஆசிரியை குறிப்பாக தலித் மாணவர்களை குறிவைத்து அவர்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  
 

click me!